நினைக்க நினைக்க மறந்தேன்...
சிலதை நினைத்ததுமே மறந்தேன்...
வெறுக்க மறுத்து பயந்தேன்
யாம் கொண்ட சாபமென்று...
வளரும் போதே உணர்ந்தேன்
மறதி மனிதனின் வரமென்று...
-
வெற்றிடமாய் போனாலும்
வெறும் நினைவாக நீ இல்லை...
கண்ணீராய் போயிருந்தால்
உன்னில் கற்றதுக்கும் பயனில்லை...
இருக்கும் வரை இணைந்திருந்தேன்
ஈடில்லா நிழல் படைப்பில்...இனி
இறக்கும் வரை இணைந்திருப்பாய்
நான் கொண்ட புகைப்படத்தில்...-
மன்றாடிப் பார்த்தும்....
மனதின் ஓரத்தில்
மறையாது நிற்கிறது....
மங்கையின் முதல் காதல்...-
உன் பெயர் கேட்கும் நேரம்.....
ஏனோ தெரியவில்லை????
கண்கள் கண்டவனையும் கட்டி அனைக்கிறது.....-
மண்புழு இல்லாத மண்ணின் அழகோ
புத்தகம் தீண்டாத புத்தியைச் சேரும்...
.
.
.
உடம்ப பிச்சு போட்டாலும் ரெண்டாதா வளர்ந்திடுவ.....
நா இல்லா நாடகத்துல உனக்கு ஏதுடா பாத்திரம்????-
Preeti shenoy
அழகென உருவம் உன் எழுத்தில் கண்டேன்....
அதனால் தானே எம் வார்த்தைகள் கொண்டேன்....
உன் பிம்பம் காணத் தோணவில்லை..
உன்னிடம் தோற்றுப் போக ஆசையில்லை...
கட்டுக் கதையாய் ஆக்கவில்லை...
உன் கதையை மறைக்க நினைக்கவில்லை...
உன் வரிகள் கேட்டு............
மேல் ஓங்கும் கால்கள் ஓய்வதில்லை...
செவிகள் சாய்க்க மறுப்பதில்லை....
குறைகளைக் கண்டு கொள்வதில்லை....
நிறைகளைக் கொண்டு துவர்ப்பதில்லை...
உன்னால் எழுத்து உயிர்ப்பதைக் கண்டு...
உனக்கென கவியைப் படைத்தேன் ஒன்று...
எனத்தான் நன்றியை மொழிவேன் என்றும்...-
புரியாட்டி புத்தியத்தான்
மெழுகூட்டி கேட்டுகய்யா...
சோறுபோடற கையெல்லாம்
சொகுசாத்தான் வாழுதையா...
இருந்தாலு சந்தோஷம்
என்னுள்ள வழியுதையா...
புடிச்சதெல்லாம் மறச்சப்படி
வாழத்தெரிஞ்ச உலகத்துல...
நெனச்சதெல்லாம் செய்யனும் னு
வாழுதிந்த உதிரமைய்யா...
((((......***பொன்னு, பொருளு ஒசத்தினு மெச்சி வாழு உலகத்துல...
உன்ன போல வாழத்தானே உசுரு உள்ள குமுருதையா...
உன்னப்போல ஒரு நாளு வாழ்க்க வாழ வரங்கெடச்சா...
நிமுந்துதானே பாத்திடுவ அஞ்சாத ஆறறிவ***......)))-
நுட்பம் இங்க வாழோனும்
இயற்கையோட அரவணைப்பில்...
ஆனா, புணர்ச்சி விதி மாறுதையா
மனுசனோட மதியளவில்...
சுதந்திரமா இருக்கோம்னு
காந்தி கொடி செல்லுதய்யா...
அதையடக்கி இருக்கோன்னு
கௌரவந்தா தடுக்குதையா...
கௌரவத்த விட்டிருந்தா
என்ன போல ஆயிருப்ப...
நடுநிலைல சிக்கிக்கிட்டு
நசுங்காம போயிருப்ப...
புரிஞ்சுகிட்டா உன்வாழ்க்க
செம்மரமா செழிக்குமையா...-
சாகத்தான போறோன்னு
தெரிஞ்சுதா நீ அணைக்குறைய்யா...
சாதி, பணம், கௌரவத்த
சாக்கடைன்னு தெரிஞ்சு அள்ளி...
இந்த குப்பையெல்லாம் தூர போட்டு
வாழுதையா இந்த உசுரு...
பாத்தி கட்டி பிரிஞ்சு வாழற
மதயானை கூட்டமைய்யா......
உனக்காக ஒரு சேதி நான்
கூற கேட்டுகைய்யா....
நல்லவங்க நாலு பேரு
சேத்துவெச்ச உலகமையா...
இயந்திரம் னு செல்லிபுட்டு
இயற்கை இங்க அழியுதைய்யா...-
நாடாளும் மன்னனையா
நாடெங்கும் சுத்தி வந்து
தெருவெல்லாம் வீடு வெச்சு
சேரு இடம் தெரியலைய்யா...
அழக ரசிச்சு, அறிவ ருசிச்சு
அனுதினமு சிரிக்கிறய்யா....
ஓடி ஓடி போறதால
நாடோடி னு அழைகுதைய்யா...
என்னழக எடுத்துக்காட்ட
விரிச்ச சிறகும் பறக்குதய்யா...
இதழ் சுருங்கா பொற்சிலைய
பாத்ததுமே சிரிச்சுபுட்ட...
என்னபோல பொறப்புதானே
கடவுளுக்கும் கிடைக்கலையே...-