தெரிந்திருந்தாலும்
மறுபடியும் மறுபடியும்
நடை பழகுகிறோம்!
கனத்த நினைவுகளின்
எடை குறைக்க-
மனக் கண் அடையாளம் காட்டட்டும்!
நானோ
தனிமையோடு புலம்புகிறேன்!
தனிமையோ,
என்னோடு
புழங்கிக் கொண்டிருக்கிறது!
ஆம்....
தனியாக இருக்க முடிவதில்லை தனிமையால்!
-
பூக்களை பறித்த பிறகு
வண்டுகள் வாழ்வதெப்படி
என்று பாடம் படிக்கிறார்கள்!
உறக்கத்து கனவுகளை
உறங்காமல் எழுதியபடி!-
செவிகளுக்கு
மௌனம் சாத்தியப்படட்டும்!
நீ பேசிய வார்த்தைகளை
வீசி வைக்க
எனக்கு கடிதம் கொடு!
-
என்
நான் நடக்கும் தூரம் வரை
என்னுடனேயே வந்து
கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு
கால் வலிக்குமென்று
நிறுத்துகிறேன்,
என் நடையை!-
இறகு போன்ற இதயம்
ஒன்றைச் சொல்ல
இரும்பு போன்ற மூளை
வேறொன்றை செய்யச் சொல்ல.....
செல்லரித்து கிடக்கிறேன்
சொல்லுக்கும் செயலுக்கும் நடுவில்-
எதுவும் கிடைக்கலாம்!
விதி என்பது
எழுதப்பட்டது அல்ல
எழுதப்பட்டுக் கொண்டிருப்பது.
பேனா அவன் கையில் இருக்கிறது அவனின்
கையைப் பிடித்திருப்பது
நம் எண்ணங்களே!-
வந்து குதிக்கும்
நம் ஆசைகளை எல்லாம் கூண்டுக்குள் வைத்திருக்கிறோம்!
நம் ஆசைகளுக்கு
வெளியே வர சிறகுகள் இல்லை!
கூண்டுக்குள் செல்ல
நம்மிடம் சாவி இல்லை!-