இங்கு
முகங்களை
விட
முகமூடிகளே
அதிகம்
நேசிக்கப்
படுகின்றன-
உன் போலி
வார்த்தைகள்
களைத்துப்
போகும்வரை
நானும் கழற்றப்
போவதில்லை
என் முகமூடியை !!-
இப்போதெல்லாம்
முகங்களை
காட்டிலும்
முகமூடிகள்
சரியாய்
பொருந்தி
போகிறது
சிலருக்கு........-
நீ ஆயிரம் முகமூடி
அணிந்தாலும்
உன்னை அரைநொடியில்
நான் கண்டறிவேன்!
உன்னை
என்னையன்றி
யாரறிவார்?
என் மாயக்கண்ணா!-
முகமூடி மனிதர்கள்
முகங்களில்
மனித முகமூடிகள்...
---தனலட்சுமி மகேஷ் கவிதைகள்-
உன் அழகெனக்கு வேண்டாம் ..
உன் செல்வமெனக்கு வேண்டாம் ..
உன் புகழ் எனக்கு வேண்டாம் ..
யாதொன்றுமறியாமல் ...
ஏதொன்றுமில்லாமல் ..
வெற்று கைகளில் ..
வழிந்தோடும் காதலுடன் ..
மனம் திணறடிக்கும் ..
பார்வை வீசும் ..
என் காதலன் ..உனக்குள்தான் ...
ஒளிந்துள்ளான் ..
இந்த தற்காலிக முகமூடியெல்லாம் ..
கழற்றி போட்டு விட்டு ..
கண்டுபிடித்து கொடு அவனை ..-
முகமூடி
மரணித்த
கணத்தில்
முகமானது
துடிப்புகளற்ற
இதயமாக
தவித்து
துடிக்குது !
-
பொய் என்ற
கவசம் தன்னை
காக்கும் என்று
நம்புகின்றனர் ...
ஆனால்,
உண்மை என்ற
அஸ்திரம் அதை
உடைத்தெரியும்
என்பதை
புரிந்து
கொள்ளவதில்லை...💔
-