ஈரமான
அமிழ்ந்து கிடக்கிறேன்
மணலாக.....
---தனலட்சுமி மகேஷ்-
Love writing
என் வாழ்வின்
ஒவ்வொரு நிகழ்வுகளையும்,
அனுபவங்களையும்,
வலிகளையும... read more
தேவதைகள்
அழுவதில்லையாம்...
அழுதாலும்
அழகாய் தான்
இருக்கிறார்கள்....
மகள்கள்..🥰🥰🥰🥰
----தனலட்சுமி மகேஷ்-
எப்போதும் "அன்பாக" இருக்கட்டும்...
விலையில்லாதது அது மட்டுமே....
----தனலட்சுமி மகேஷ்-
வரும்
கூட்டங்கள் வேதனைகளை
பகிர்வதில்லை...
பிறர் வலிகளை கண்டு
தன் வலியை மறந்து போகின்றனர்.....
பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்..?
வந்தது
வேடிக்கை பார்க்கத்தானே.....!
-----தனலட்சுமி மகேஷ்
-
சேர்ந்தே இருந்தாலும்
பிரிந்தே இருக்கிறோம்
பிரிய நேர்ந்தாலும்
சேர்ந்தே இருக்கிறோம்
இடைவெளிகள் அதிகமாகி
தொட்டு பேசுவதும் குறுகி
பார்வைகள் பட்டும்படாமல்
மோதிச் செல்கின்றன .
நல்லதானாலும்,
தீயதானாலும் .
ஒரே விஷயத்தை
திரும்ப திரும்ப
யோசித்தால்
அது கிளையாய் விரிந்து
மரமாய் அகன்று
வேரோடிப் போகும்...
நினைவுகளோடு
வாழ்வதல்ல.வாழ்க்கை
இருக்கும் போதே
நிறைவோடு வாழ்வதே
வாழ்க்கை.
----தனலட்சுமி மகேஷ்
-
இறுதி வீடு.....
நமக்கு வேண்டிய
ஒரு வீட்டிற்கு திட்டமிடவே முடியாது...
நிதி ஒதுக்கவோ,
இடம் பார்க்கவோ,
அலங்கார ஆடம்பரங்களை
செய்யவோ,
சுற்றத்தை ,நட்புகளை அழைத்து
விருந்து படைக்கவோ
என எதையும் செய்ய இயலாது...
யாரோ ஒருவர் கைகளில் உள்ளது எல்லாம்...
வாழ்கை எப்படி வாழ்ந்தாலும்
அனைவருக்கும் பொதுவானது இதுதான்....
----தனலட்சுமி மகேஷ்
-
இனிய இந்திராம்மா
உன்னுடனான ஞாபகங்கள்
உடனிருக்கும் போது
நீ மட்டும் இங்கு இல்லை....
நீ ,
வாழ்ந்த காலங்கள் எல்லாம்
வசந்த காலங்கள் தான்..
இன்றோ வறண்ட நிலமாய் எங்கள் மனது...
நினைவுகளோடு
வாழ்வது வாழ்க்கை அல்ல....
நிறைவான உனது வாழ்க்கை பயணம்
என்றும்
எங்கள் நினைவுகளோடு
இருக்கட்டும் ....
இறைவனடி சேர்ந்த உன் இதயம் என்றும் அமைதி பெறட்டும்....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
---தனலட்சுமி மகேஷ்
-
சிலவற்றிற்கு அர்த்தம் உடனே புரியும்.....
சிலதிற்கு இல்லை ....
சிலது புரியாமல் இருப்பதே நன்று.....
நலனை அறிவதற்கு
நமக்குள் இருக்கும்
உணர்வு போதும்....
உடனிருந்தாலும்,
ஓராயிரம் மைல்
தூரமிருந்தாலும்
நீ வாழ்ந்த அதே கருப்பை வீட்டில் தான் நானும்
இருந்தேன்....
தூரங்களை கடக்க
தொலைபேசி தேவையில்லை...
தொலைவில் நீ
இருக்கிறாய் என்ற
மன உணர்வு போதும்....
ஆயிரம் இன்னல்கள் இருந்தாலும்
நாம் அனைவரும் ஒன்று தான்....
தாய், தந்தை ஆசியோடு என்றும்
இணைந்திருப்போம்...
-----தனலட்சுமி மகேஷ்
-
கேட்காமல் தருவது
குழந்தைக்கு முத்தம்...
கேட்டு பெறுவது
குழந்தையிடம் முத்தம்...-
வாழ்க்கையின்
செல்வங்கள்
எல்லாம் நம்மோடு இருக்க
இல்லாத ஒன்றே நிரந்தரம்
என தேடி ஓடுகிறோம்.
ஓட்டம் நின்ற பின்
ஓரே அடியாக அடங்கிவிடுகிறோம் .
இடையில் எது வந்தாலும்
போனாலும்
இல்லாதது ஒன்றே நிரந்தரம்
என புரிவதற்குள்
எல்லாம் முடிந்துவிடும்
இதான் வாழ்க்கை...
இருக்கும் வரை
வாழ்ந்துவிடுங்கள்
பிரியமானவர்களோடு .
---தனலட்சுமிமகேஷ்-