உன் ஐவிரல்களுக்குள்
அடைக்கலமாகி விட்ட
என் ஏதோவொரு விரலை
ஏக்கமாய் பார்க்கின்றன
என் ஏனைய
விரல்களனைத்தும்...-
சின்னச்சிறு உலகில்
செயற்கையாய்
பெரிதாக்கி கொள்கிறோம்..
நமக்கு மட்டுமே
இத்தனை அல்லல்கள்
என்று...
பெரிதினும் பெரிது
யோசித்து,
சிறிதினும் சிறிதாக்கி
சிரித்து வாழ்ந்து விடுவோம்..
இந்த சில்லறை
சிரமங்களை யெல்லாம் 💫-
அழுது கொண்டேனும்,
பிதற்றிக் கொண்டேனும்,
திட்டிக் கொண்டேனும்,
உளறிக் கொண்டேனும்,
உன்னைத்தான்
அழைத்துக்
கொண்டிருப்பேன்...
உன்னையன்றி வேறு யாரையும்
அழைக்க,
நீ தான்
எனக்கு யாரையுமே
உரிமையாய்
வைத்திருக்கவில்லையே /-
நிதமும்
அனுதினமும்
நித்தம் நித்தம்
உள்ளுறையும் ஆன்மா
மடிவதென்வது
இப்பயணத்தில்
வாடிக்கையாகிப்
போன பின்னரும் கூட,
எப்படியாவது
மூச்சை பிடித்துக் கொண்டு
முழித்துப் பார்க்கத்தான்
வேண்டியுள்ளது..
கடந்து கொண்டிருப்பது
பிறவி என்னும்
பெருங்கடல் அல்லவா?-
மயில்சாமி
தொடங்கி வைக்க
சிவன் வந்து
சிறக்க வைக்க
வீரமுத்துவேல் வந்து
கிடைக்க வைத்தார்..
வெற்றியெனும் பரிசை
வெண்ணிலவில்..-
பெறுகின்ற அன்பெல்லாம் பொய்யென
தெளிந்திடு!
தருகின்ற அன்பெல்லாம் மெய்யென
பேணிடு!
மெழுகிட்ட பச்சையத்தின்
மேல் நிற்கும் துளி நீர் போல்,
மெய்யான சிவம் கண்டு,
பொய் விலக்கி வாழ்தலே
உலகில் உயர்ந்த
உன்மத்தம் 🙏-
என்றோ ஒரு நாள்
என் இதயத்தை திருடிய
பாடலின் பல்லவிதான்
இன்றென் இதயத்தில் இருந்து
தொலைந்து போன
அமைதியை அமைதியாக
திருப்பி தந்தது..
-
வெண்ணிலவு எனை கொஞ்சம் தின்று செரிக்க,
விளக்கொளியும் எனை கொஞ்சம் உண்டு
சிரிக்க,
விடாப்பிடியாய் இன்னும்
கூட என்னை கொஞ்சம்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..
உன் தாகம் தீர்த்து
என் தாபம் தீர்க்க..-
இறுதியில்
இறுக்கமாய் அணைத்தபடியே
உன் இதயத்துடிப்பில்
இளைப்பாறும் நிமிடம்
மட்டுமே
எனை பொருத்தமட்டில்
"மோட்சம் " எனப்படும்..
-