QUOTES ON #பொறாமை

#பொறாமை quotes

Trending | Latest
21 FEB 2021 AT 7:49

என்னிடமில்லையே என்ற
ஏக்கத்திற்கும்...
வேறிடம் மட்டும் உள்ளதே
என்ற பொறாமைக்கும்
எள்ளளவே இடைவெளி...
இடைவெளி குறைந்திட்டால்
வேறுபாடும் மறையலாம்...!

-



தெர்மாக்கோல் விஞ்ஞானியின்
சாதனையை முறியடிக்கும் விதமாக
தனுஷ்கோடி மணல்புயல் தடுப்பின்
புதிய விடியலாக பனைமட்டை
தடுப்புவேலி உலகநாடுகளின்
மத்தியில் பொறாமையைத் தூண்டியுள்ளது..
புத்தம் புது பாதையில்
தமிழகத்தின் ஒளிவட்டம்
கண்ணை பறிக்கிறது...
🤣🤦🤣

-


20 FEB 2019 AT 9:27

பொறாமையின்
படிமங்கள்....
சில புன்னகைகளை
சிதைக்கின்றன!

-


11 OCT 2018 AT 15:03

பொறாமை.

படிப்பதிலே பொறாமை கொள்..

வாழ்க்கையில் முன்னேற பொறாமை கொள்...

பிறரை அழிப்பதில் பொறாமை கொள்ளாதே...

-



பொறாமை தீ பொல்லாதது
அது சூழ்ந்த மனது ஒரு போதும் வெல்லாது ...

-


1 MAR 2020 AT 6:23

சில நேரம்
பொறாமை
தானெனக்கு
உன்னாடை
மேலாக

-


17 JAN 2020 AT 16:48

"பூக்களைப்
பறிக்காதீர்கள்"..

பூங்காவிற்கு நீ
வருவதாய் இருந்தால்
அறிவிப்பு பலகையை
மாற்றி எழுத வேண்டும்..

"பூக்களே
முறைக்காதீர்கள்" !!

-



நன்மையெல்லாம்
நலமாக
தீமையெல்லாம்
தீய்ந்து போக
பொறாமையெல்லாம்
பொசுங்கிப் போக
கோபமெல்லாம்
எரிந்து போக
மனதில் உள்ள
குப்பைகளை
எல்லாம் இந்தப்
போகியோடு
தீயிட்டு கொளுத்துவோம்
அனைவருக்கும் இனிய
போகிப் பண்டிகை
திருநாள் நல்வாழ்த்துக்கள்...

-



நம் அன்றாட
உரையாடல்களில்
உன்னை சிறு நொடியாது
பொறாமை கொள்ளச்
செய்வதே என் வாடிக்கையாய்
கொண்டுள்ளேனடா நான்..!

என்னை நீ மட்டுமே
நெருங்கிடும் உரிமைக்
கொண்டவனென
நீ உரைக்காவிடினும்
உந்தன் மௌன
பாக்ஷைகளை
ரசிப்பதில் அத்தனை
அலாதி ப்ரியமடா எனக்கு..!

-


5 NOV 2020 AT 8:49

உனக்கு மேல் வளர்பவனைக் கண்டு
எப்போது நீ பொறாமை கொண்டாயோ
அப்போதே நீ வீழ்ந்து விட்டாய்!

-