அடர் புழுதி காற்றின்
நடுவே
அனல் பறக்கும் பறக்கும்
வெக்கையுடன்
ஓர் மெல்லிய மலை காட்டு
தென்றல் போல்
என்னை தீண்டி செல்கிறாய்
கண்மணி
உன் நினைவால்
கொஞ்சம் தடுமாறினாலும்
அன்பில் தடுமாற்றம் இன்றி
உனக்காக காத்திருக்கிறேன்
கண்மணி...-
மதம் கடந்து மனிதம் பேசுவேன்
உயிர் கடந்து காதல் ப... read more
உன்னை இழந்து தவிக்கிறேன்
அதிகமாக
காதலிக்கிறேன் அதற்கு
மேலாக
முத்தங்கள் மட்டும்
மிகுதியாக
அன்பு அளவில்லாமல்
சோகம் இவற்றையும்
கடந்து ...-
தேடுகிறேன் உன்னை
கட்டிலின் வலப்பக்கம்
காணவில்லை !
உன் சத்தத்தை
இன்று
குளிரூட்டியின் இரைச்சல்
சத்தம் மட்டும் மிகுதியாய்
யாருமற்ற இந்த அறையிற்குள்
நீ படுத்து உறங்கிய தலையணை
மட்டும் தான் என் கவலைக்கு
தீர்வாய்
இன்னும் கவலைக்கு தீ மூட்ட
வாட்ஸ்அப் செயலியில்
இன்னும் பார்க்காத
எனது குறுஞ்செய்திகள்
அவள் தூங்கி இருப்பாள்
என்று அறிந்ததும்
காதல் விஷம் எறிய மூளை
இன்னும் எதோ எதோ
கவலைகளை கொட்டிக்கொண்டே
இருக்க
மறு புறம் கண்ணீரும் நானும் ...
-
காதல் எனும் கடலை தாண்டி வந்து
திருமணம் என்ற இடத்தில் இணைந்து
கர்ப்பம் என்றதும் மீண்டும் கடல் கடந்து
வந்த இடமே சென்று விட்டாய்...
பிரிவு எனும் வேதனை தந்து
கணவன் என்னை வதைத்து சென்று விட்டாய்
இருந்தும் உன் காதலை என்றும் நான் மறவேன்
என் பிள்ளை பூமி தொடும் முன்னமே நான் மீண்டும் உன்னிடம் இருப்பேன் சகியே
காதல் கொலை செய்கிறது உன் நினைவுகள்
சித்திரவதை செய்கிறது
தாங்கி கொள்கிறேன் உனக்காக நமக்காக
கண்மணி...-
கடல் கடந்து போய் விட்டாலும் என்
காதல் என்றும் உன்னுடன்
இருக்கும் கண்மணி...-
மீண்டும் தட்டச்சு செய்ய துவங்குகிறேன்
உன் பிரிவு எனும் அரக்கனை அழிக்க...
கவலை எனும் நோயினை விரட்ட ...
எதிர் பார்த்து கிடப்பேன் உன் முகத்தை மீண்டும்
காண
நீ கடல் கடந்து சென்றாலும் என் உயிர் பறித்து போனாலும்
என் உயிர் உன் நினைவில் என்றும் இந்த செயலியில்
என் விரல்கள் வீணை போல் கவிதை மீட்டும் உனக்காக கண்மணி
என் அன்பு மனைவியே !-
மௌனியாக இருக்கிறேன்
நானும்
இந்த சுயநல உலகில்
இல்லாத கற்பனை
சுயமரியாதையுடன்...-
அவள் நான் எழுதிய
கவிதைக்குள்
அழிக்கவும் கஞ்சனாய்
நான்
அவள் பிழையாய்
இருந்தாலும்
அழகான எழுத்து பிழையென
அந்த காகிதத்துக்குள்ளும்
என் நெஞ்சுக்குள்ளும்
அவள்...-