அவளை மறவாது
இருக்க மட்டுமே தானே தவிர
அனுபவங்களையும் அவமானங்களையும்
நினைவுகளையும் நிலையற்றவைகளையும்
உறவுகளையும் உற்ற துணையைத் தேடி
நிச்சயம் பற்றிடவில்லை....
ஒன்றுமே அறியா பச்சிளங் குழந்தையாய்
உள்ளே நுழைந்தவள்..
வாழ்வில் மொத்தத்தையும் அள்ளி அள்ளி வழங்கியது
வாழ்நாள் முழுவதுக்குமான தேக்கி வைக்கும் அளவிற்கு
நினைவுகள் கோடி...
யாவருக்கும் நிச்சயம் உண்டு
இனிமையான கடந்த காலம்...
அவற்றை இயல்பாய்
அவனோடு அவளுள் அவளை
இன்று ரசிப்பதிலே
அலாதியான சுகம் தான்...
நிச்சயம் ஆசைகள் பல உண்டு...
ஆனால் இம்முறை அவை
நிஜங்களை ஒற்றியே மட்டும்...
நிழலை தேடி இருளில் மூழ்க
இரவின் வெளிச்சத்தில் மட்டுமே
வாழ்க்கையை நகர்த்துபவள் இவள் அல்ல...
பல நிஜங்களை நிழலில் உணர்ந்து..
நிஜத்தை மட்டுமே நம்பிவாழும்
ஓர் முதிர்ச்சியை உணர்ந்த மனிதி நான்...-
Founder of Yaappu Publication
H... read more
அன்றே பல்வேறை
விமர்சித்தவள்...
முணுங்கலுக்கும்
முணுமுணுத்தவள்...
இன்று அவளை
திரும்பி காண்கையில்
ஆயிரமாயிரம் நினைவுகள்...
எண்ணிலடங்கா பயங்கள்...
அழகான கவிதை
அலங்கோலமாய் மாற்ற
மாயைக்குள் சிக்குண்டாதே
எனும் ஆழ்குரல் கூறும்போது
அழகான உணர்வுகளில் தொடங்கி
ஆழமான காதலை அறிந்து
நிஜமான உலகில்
நிதர்சனமான வாழ்வில் வாழும்
எனைச் சிறைபிடிக்கவோ
சீரழிக்கவோ இனி ஓர் மனம் இல்லை
என தீர்க்கமாக எண்ணுகிறது என் சுயம்...
-
கைகள் கொஞ்சம்
படபடத்து செல்கிறது...
ஏன் என அறியும் முன்னே
பலவாறு நினைவுகள்
கண்முன் வந்து செல்கிறது...
இஃதோடு நிறுத்திக் கொள்
என்கிறது ஓர் பக்கம்...
மீண்டும் புதுப்பித்துக் கொள்
என்கிறது மறுபக்கம்....
ஆனந்தமோ ஆபத்தோ
அவற்றை தேடாமலும்
எதிர்பாராமலும்
நீ நீயாக மட்டுமே
கடந்து செல்
என்பதே நிதர்சனம்....-
ஏனோ காலப்போக்கில்
மற(றை)ந்தே போகிறது
அவைகளுக்கு நம்மை
பிடிக்காமல் போனதாலோ
என்னவோ.?!-
எங்கோ என்
சோதனை காலத்தில்
உன் மடி தேடும்
குழந்தையாய் ஆகிறேன்
இன்னும் மடி நிரம்பா நான்....-
அன்றை விட
இன்றே எனக்குள்
எழும் பல குழப்பத்திற்கு
உன் ஆறுதல் குரல்
தேவைப்படுகிறது....-
உள்ளுக்குள் எழும்
விடைக் கிட்டாத
பல குமறல்களுக்கு
உன் வாய்மொழிக்காய்
ஏங்குகிறது என் மனம்...-