இங்கே திறமைகள்
புதைக்கப்படவில்லை!
முகமூடி போட்டு
மறைக்கப்படுகின்றன!
உன் திறமை என்னவென்று
உனக்கு தான் தெரியும்!
உழைத்துப் பார்
உண்மை புரியும்!
பயிற்சி, விடாமுயற்சியை
தவறாமல் பாராட்டு!
உன் திறமை எதுவென்று
உலகிற்கு காட்டு!
ஊக்கம்தான் திறமைக்கு
தேவையென்பதை ஊட்டு!
திறமையின் விளைவை
சகமனிதனுக்கு புகட்டு!
திறமையும் பாடும்
உனக்கான பாட்டு.......-
இங்கே திறமைகளும்
முகத்தின் நிறத்தை
பார்த்தே தீர்மானிக்கப்படுகிறது...
திறமைகள் இருந்தும்
தெரிந்தவர்களுக்கே
வாய்ப்பும் பாராட்டும்
கிடைக்கிறது...
தற்காலிகமாக
திறமைகள்
திரையிட்டு
மறைக்கப்படலாம்
நிரந்தரமாக
செயலிழக்க
செய்ய இயலாது...-
முகவரி எழுதாத கடிதம் ஒன்று
அஞ்சலகத்தில் உறங்குது இன்று
எழுதியவனும் தெரியவில்லை
எடுத்துப்படிக்க ஆளுமில்லை
இளைய தலைமுறையின் இன்றைய திறமை போல்
இருக்கும் திறமைகள் பயன்படா முடங்கிட
இல்லாத திறமைகள் மேடையேறி முழங்குதே
என்று விழித்திடும் ஜனநாயகம்?
விழித்தால் வெல்லுமா ?
அதிகார திமிரையும்?
பணக்காரக்கொழுப்பையும்???
-
அலமாரிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளென
அங்கீகாரம் கிடைக்காத சிலரின் திறமைகள்!!!-
அழியாவண்ணம் நிலைத்திருக்கும்
எங்கள் திறமைகள்முன்
அழியும் தாளில் எழுதுவதை
வைத்தோ ஒப்பீடு...
இதற்கு ஈடாய் திறமைகள் ஏராளம்
திணற வைக்கும்............
-
தோட்டத்தில் பூத்த பூவொன்று
தன் இருப்பினை அடையாளம் காட்டாமல்
மறைத்து கொண்டது,
தன் அழகினால் யாரேனும் அபகரித்து
விடுவார்களோ என்ற அச்சத்தில்...-
நம் திறமைகளுக்கு புத்துயிர் கொடுப்பதே நம் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விடயமாய் அமையும்...
-
வாழ்க்கையில் கஷ்டம் வருவது
உன்னை அழிப்பதற்கு அல்ல!
உன்னில் மறைந்திருக்கும்
திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு!
-
திறமை..
நிறைய திறைமைகள்,
சமயலறையிலேயே....
முடங்கிக்கிடக்கின்றன...!-