இணைந்த கோடுகளாய்
பயணிப்பதா காதல்...
கோட்டிற்கு இடமளித்த
தன் உருவோ தெரிவதில்லை...
அந்த வெள்ளை காகிதமாய்
என்னை காண்கையில்...
அந்த வர்ண கோடு மட்டுமே
உயிரூட்டமானது தாளில்...
மனதில் ஏறிய காதல்
எழுதப்படாத ஏக்கத்தில்...
— % &-
திருமண பந்தம் ஜனவரி22
இணைந்த நாள் 4-11-2018
முதல் கவிதை 4-11-2018
... read more
நடையை மறந்தது நேரம்...
மாறிக்கொண்டே இருப்பதால்
ஒப்பனை கூட்டுது உருவம்...
ஓட்டத்தை மாற்றம்
நிறுத்திடும் முயற்சியில்...
ஓட்டத்தின் அருகினில்
மாற்றமும் சென்றதும்..
மாற்றத்தின் மாற்றமோ
சட்டென நிறைவுறும்...
-
இருளில் தொடங்கி
இருளில் முடிவுறும்...
கருமை உருவினுள்
இருளின் ரகசியம்...
போர்வை விலக்கிட
மறையும் ரகசியம்...-
அடங்காத பசியை
அடக்கும் முயற்சி...
தின்ன தின்ன
நிரம்பாத வயிற்றுக்கு...
அது கேட்பது கிடைத்தாலும்
அடுத்தடுத்து கேட்பதோ...
தாமதம் ஆகையில்
கேட்பதை நிறுத்தாமல்
விதவிதமாய் எத்தனை...
அப்பப்பா முடியாமல்
தோற்கிறேன் ஆசையின்
பசியிடம்...-
அதில்
ஆயிரத்திற்கும்
மேலாய்
எழுத்துக்கள்...
கற்றுக்கொள்ள
விரும்பினால்
காதலிக்க
துவங்கு....-
கருமை நிறைந்த சூழலை
வெண்மை தேடுவது
தன்னை தனித்துக் காட்ட...
விரும்புகிறது என நினைத்தால்
கருமையோ ஏமாறும்...
கருமையின் மனம் அறிந்தால்
வெண்மையும் நிறம் மாறும்...-
குளிர் மறந்து
சுகமான தூக்கம்
என் மனதிற்கு...
நெடு நேரம்
நீடிக்கவில்லை...
வெயில் காலமெனும்
வாலிப வாழ்வில் நான்...
-
தினம் தினம் மேகத்தில்
எழுதி அனுப்புகிறது வானம்..
பதிலுக்கு கடலும் அலையில்
வரிசை வரிசையாய் எழுத...
படித்து முடிக்கும் அடுத்தடுத்து
தொடர்ந்து காதல் வரிகள்...
இரண்டும் எழுதிக் கொண்டே
அடுத்த நிலைக்கு நகரமுடியாமல்
படிப்பதும் எழுதுவதுமாய்...
யுகங்கள் கடப்பதே அறியாமல்...-
வாசிக்கும்
இதழ்களை
காதலிக்க வைக்க
ஒப்பனை
இட்டு கொள்கிறது
எழுத்துக்கள்...-