திருமணவிழா அழைப்பு
அன்புள்ள YQ சொந்தங்களே!
தங்களின் அன்பான
வாழ்த்துகளையும்
பேரன்பான வருகையையும்
எதிர்நோக்கி
அன்புடன் அழைக்கிறோம்...
நாள்: 08-ஜூன்-2025 (ஞாயிறு).
இடம்: உருளிக்கல் செக்போஸ்ட்,
வால்பாறை,கோவை.-
🌜90's KiD🌛
🍃valparai,Coimbatore🍃
🐺Ha-Ku-Na-Ma-Ta-Ta🐗
📩Email: mail2krishnada... read more
மாற்றல்
என்றோ வாசித்த
நூலொன்றின்
நாற்பத்தியேழாம் பக்கத்தில்
கிடைத்ததொரு
இருபது ரூபாய்
அம்மா சொல்லிக் கொடுத்த
கடுகு டப்பா இரகசியங்கள்
இப்போது புத்தகங்களுக்கு
நடுவில் புதைந்திருந்தன;
அந்தத் திடமான நினைவுகளை
துளித் துளியாய் மீட்டெடுத்தன
கையிலிருந்த பருப்புவடையும்
ஒரு குவளைத் தேநீரும்...-
நேர்வழி எப்போதும்
குறுக்கு புத்தியை சிந்திப்பதில்லை
குறுக்குவழி எப்போதும்
நேர் புத்தியை அங்கீகரிப்பதில்லை
எந்தவழி வேண்டுமென்பதெல்லாம்
அந்தந்த நேரத்து முடிவுகளே...-
தள்ளுவண்டிகளின் சங்கமமதில்
பொரிப்பொட்டலத்தில் மடித்த
கதைகளையெல்லாம்
சற்றே தள்ளிநின்று
கேட்கின்றது நிலவு
நிலவின் சுவாரசியத்திற்கு
கொஞ்சம் நிலக்கடலையையும்
மிளகாய் பொடியையும் சேர்த்து
மசாலா கூட்டி
வாசிக்கின்றது இரவு
இரவின் வாசிப்பிற்கு
கண்சிமிட்டாமல் வெளிச்சமிடுகிறது
உயர்ந்துநின்ற மின்கம்பம்
இதற்கிடையில்
மெல்ல மெல்ல
தேநீர் கடை நோக்கி
நகர்கின்றது;
காரம் தாங்காத நிலவு.-
சற்றுநேர அமர்வு
அது அமர்வு மட்டுமல்ல
சிறிதொரு ஆசுவாசம்
சிறிதொரு இரசிப்பு
சிறிதொரு யோசனை
பிறகொரு தேடலில்
துவங்கி கலையுமது
தேடலெல்லாம் முடிந்தபின்
மண்மீதமரும் இலையாய்
முற்றிலும் ஓர் அமர்வு-
தனக்கான இடம்
எதுவென்றறியாமல்
இன்றளவும்
அலைந்துகொண்டிருக்கிறது;
பணம் ஓர்
இலக்கற்றப் பயணி-
எங்கே இருந்தால்
மகிழ்ச்சியாக இருப்போம்
என்று எண்ணுவதை விட
எங்கிருந்தாலும்
மகிழ்ச்சியை காண்போம்
என்றிருந்தால்
அந்த மகிழ்ச்சியே
நம்மைத் தேடி வரும்
ஞானத்தைத் தேடுங்கள்!
அத்தேடலில் கொஞ்சம்
உங்களையும் தேடுங்கள்.-