Pavitha Thangaraj   (பவிதா)
225 Followers · 66 Following

read more
Joined 8 December 2018


read more
Joined 8 December 2018
28 OCT 2022 AT 21:58

அருகில் இல்லா
அன்பும் ஓர்
அரியவகைப் பொக்கிஷம் என்று..!

-


10 AUG 2022 AT 20:16

பாரம் குறைத்து
தூரம் நின்று சிரிக்கிறாய்!
தேகம் கலைத்து
வேகம் குறைகையில் எல்லாம்
நீ வந்து நிற்கின்றாய்!

தேய்ந்து தேய்ந்து
வளர்ந்து - தினம்
தேவதையாகவே தெரிகிறாய்!

இருள்சூழ் உலகின்
அருகே நீ மட்டும்
பிரகாசிக்கிறாய்!
உனை நான் மட்டும்
தினம் ரசிக்கிறேன்!!!

நீ நிலவு அங்கே - உன்னால்
நான் களவு இங்கே!!

-


22 JUL 2022 AT 8:40

இன்பத்தில் மகிழ்வதும்
துன்பத்தில் கரைவதும்
புதிதில்லை!
விட்டுச்சென்ற இடத்தைவிட்டு
மனமேனோ இன்னும் வரவில்லை!
சேர்த்து வைத்த காலம் - இந்தமுறையும்
பிரித்து விட்டதுபோலும்!!!

-


20 JUL 2022 AT 21:18

தொலைந்து தொலைந்து
தொலைதூரம்வரை தொடர்ந்து
தென்றலோடு தழுவி
இருளோடு கூடி
இன்றும் என்னை சிறைபிடிக்கத்தான்
இத்தனைதூரம் தொடர்ந்தாயோ!!

-


30 JUN 2022 AT 21:51

மௌனம் கலைந்த மேகம்
மனம் கிறங்கி
இடம் பெயர்கையிலெல்லாம்
வானமெங்கும் மழை!
பூமியெங்கும் மணம்!!!

-


24 JUN 2022 AT 21:35

இருளும் நிழலும்
இங்கே நகர
நினைவும் நிஜமும்
எங்கோ மறைகிறது !!

நிலவொரு பக்கம்
நினைவொரு பக்கமாய்
இரவோடு எல்லாம்
இணைந்தே நகர்கிறது !!

இனி யாவும்
வெறும் நினைவானால்
நிஜம் தேடிடும்
நிழல் நாம் !!

-


19 JUN 2022 AT 14:05

எட்டி வைத்த அடி
தட்டிவிடாமல் காத்து!
எட்டா உயரம்வரை
தூக்கி வைத்து உலகமும்
காட்டி - அன்புத்
தூளியில் ஆராரிரோ
பாடி!!!

விழியிடையே வைத்து - வருடங்களாய்
வழி காட்டி!
தினம் ஒவ்வொன்றிலும் - என்
குணம் ரசித்து!

தனக்கென்ற ஆசைகள்
அனைத்தும் மறந்து!
எனக்கென்ற ஓர்உலகம் படைத்து
என்சிரிப்பில் - உன்
அலாதி இன்பமெல்லாம் கண்டு
வாழ்கிறாய்!

உன் உயிர் நகலாய்
உலகம் கற்றிட - என்றும்
உள்ளங்கைப் பிடியில்
ஆசை மகளாய்
நான்!!

-


17 JUN 2022 AT 22:45

உயிர் தனித்திருக்க
இரவு மட்டும்
இனிமையாய் கழிகின்றது!
நிலவோடும்
நீலவண்ண முகிலோடும்!!!

-


8 JUN 2022 AT 7:15

மறந்துபோன வழக்கங்கள் - மீண்டும்
பிறந்துவந்து நிற்கையில்
இன்னும் கொஞ்சம்
இனிக்கிறது வாழ்க்கை!!

-


5 JUN 2022 AT 17:54

விடியலுக்கும் இருளுக்குமாய்
உருளும் வெள்ளை நிலவு!!
இடைவிடாமல் நடைபோடும்
நட்சத்திரக் கூட்டம்!!

இதற்கிடையே,
முத்தமிட்ட தென்றலோடு
மொத்த நினைவையும்
கோர்த்துவிட்டாய் நீ!!

எட்டிப்பார்க்கும் முகிலருகில்
எனைக்கட்டி அணைக்கும்
நம் நினைவுகளுடன் நான்!!

காலம் கடந்தும்
தூரம் தொலைந்தும் - நம்
காதல் மட்டும்
இன்னுமேனோ காத்திருப்பில்!!!

-


Fetching Pavitha Thangaraj Quotes