அனைவரும் சார்வரி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இந்த வருடம் அனைத்து செல்வ வளங்களும் உங்களை வந்தடைய வாழ்த்துக்கள்
விவசாயி ஒருவரை நண்பனாக பெற்று
உங்கள் கவலைகள் மறைய வாழ்த்துக்கள்...
-
மூத்த நாகரிக குடி
கீழடி...!
அண்டத்தின் மையப்புள்ளி
சிதம்பரம் நடராஜன் கட்டவிரல்...!
மொழி பிறந்த இடம்
தமிழினம்....!
இன்னும் எத்தனை எத்தனை
அதிசயத்தை உள்ளடக்கிய
யம் தமிழினம் வரலாறை
வரிசைகட்ட பக்கங்கள்தான்
போதாது...!
மூத்தகுடி தமிழினத்திற்கு
சித்திரை 01நாள்
புது வருடபிறப்பு
நல் வாழ்த்துகள்...!
💞க.கொ.மணிவேல்...🖋️
-
கனிகாணும் நாளில்
வளங்காணட்டும்,
முகங்காட்டும் கண்ணாடி
வாழ்வில்
சுகம் காட்டட்டும்...,
அன்போடு எனை
காணும்
கண்களுக்கெல்லாம்..
🌹🌹🌹🌹🌹-
அமுதினும் இனியவள்.
ஆண்டுகளால் பழையவள்.
இனிமைக்கு இணையிவள்.
ஈர்ப்பதிலே காந்தமிவள்.
உலகறிந்த உண்மையிவள்.
ஊக்கத்தின் உயர்விவள்.
எல்லாம் அடக்கியவள்.
ஏற்றத்தின் தோற்றமிவள்.
ஐயமின்றி அனைத்துமிவள்
ஒள் ஒளியிவள்.
ஓவியமாய் எழிலிவள்.
ஒளவைக்கு பிடித்தவள்.
இத்தனை சிறப்பானவளுக்கு
மற்றுமொரு அகவை கூடிய நாள்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-
சித்திரை ஒன்று
விசுவாவசு....
தமிழ் புத்தாண்டு கொண்டாடும்,
அனைத்து....
தமிழ் சொந்தங்களுக்கும்,
மனமார்ந்த....
இதயம்கனிந்த
இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள். !
-இராதாஇராகவன்.-