நான்...
வாசிக்கவிரும்பும் புத்தகம்,
உன் விழிகள்.!
அதையேனடி...
இன்னொரு புத்தகத்தால்,
மறைத்துக்கொள்கிறாய்!
-இராதாஇராகவன்.-
B.Lit.. B.Ed.., M.A.., M.Phil..(தமிழ்).
"WITHOUT YOU I AM NOT... read more
வரங்களையும்...
சந்தோசங்களையும்
தேடித்திரியும் இவ்வாழ்வில்,
தேடாமாலேயே....
கிடைத்துவிடுகின்றது,
துன்பமும் கண்ணீரும்.!
-இராதாஇராகவன்.-
பறவைக்கு...
பாரம் தாங்காமல்,
உதிர்க்கவில்லை இறகை!
கிளைக்கு....
பாரம் தாங்காமல்,
உதிர்க்கவில்லை இலையை!
ஆனால் மனதிற்கு....
பாரம் தாங்காமல் மட்டுமே,
கண்ணீரும் உதிர்கிறது!
-இராதாஇராகவன்.-
சந்தோசத்தில்...
நீச்சலடிப்பது மட்டுமில்லை,
வாழ்க்கையென்பது!
துன்பத்தில்....
மூழ்கி தத்தளிக்கும்போது,
கைகொடுத்து...
தூக்கிவிடுவதும்தான்.!
-இராதாஇராகவன்.-
பிரிவே....
கல்லறைக்குள்ளும்
காதலை சொல்லும் வாய்ப்பு!
விதியே...
அதையாவதேனும்
மரணத்திடம் தந்துவிட்டு போ!
-இராதாஇராகவன்.
-
பொய்கள்...
கைபிடித்து அழைத்துசெல்லும்,
வெளிச்சத்திற்கு.!
உண்மைகள்....
கைதடவி தடுமாறவைத்துவிடும்,
இருட்டுக்குள்ளே.!
-இராதாஇராகவன்.-
தவறென்பதை...
சுட்டிக்காட்டுபவர்களை,
வெறுக்காதீர்கள்.!
அதைவிட....
பேரன்பு வேறெங்கே,
கிடைத்துவிடப்போகிறது!
-இராதாஇராகவன்.-
நிலவுக்கு...
நான்குவழி சாலை.!
எப்போதாவது வரும்,
செயற்கைகோள்...
விஞ்ஞானிகளுக்கு,
இலவசமாக...
வடைசுட்டு தரும் பாட்டிக்கு,
மஹிந்திரா குழுமம்,
கட்டமைத்து கொடுத்தது.!
Just for kidding ....
-இராதாஇராகவன்.
-
மழையை....
ரசித்துக்கொண்டிருக்கிறேன்!
சன்னலுக்கு.....
உள்ளிருந்தபடியே!
மழைத்துளியோ.....
கண்ணாடியில் கவிதையெழுதியது!
-இராதாஇராகவன்.-
காதலென்பது வேறொன்றுமில்லை,
வாழ்க்கையில் கைவிடும்....
நினைவுகளென்பது கைவிடாது,
மீதி வாழ்வை காப்பாற்றிப்போகும்!
-இராதாஇராகவன்.
-