தமிழ் மொழியின்
பருவ மங்கை
வண்ண வண்ண
மலர் போலவே
மிருதுவாக
அன்பை பொழிபவள்
பூக்கள் பூக்கும் நேரம்
வீசூம் வாசனை
திரவியம் போல்
நேச பூக்களை
அள்ளி அள்ளி
வீசுபவள்-
கண்கள் சொல்லும்
விநோதம்
கைகள் இரண்டும்
பத்து விரல்களும்
புரியும் அபிநயம்
கால்கள் ஜதிகள் ஆட
சலங்கைள் உருவாக்கும்
இசையின் ராகமாலிகா
மந்த மாருதம்
மலைய மாருதம்
புவியில் உலாவ
மங்கையர்க்கரசி நடனம்
அரங்கினிலே உலா வர
கண்கொள்ளா காட்சியாகும்
-
ஒரு போதும் ஆகாது
உன் மேல் நான்
வைத்த பாசம்
புனிதம்
அதை வேறு படுத்திய
மதம் தான் பிழை
இனிய வரும் ஜென்மத்தில்
இருவரும் மதம் இல்லாத தேசத்தில்
பிறந்து காதல் செய்வோம்-
ஆல மர விழுதுகள்
மாதிரி
நம்முடைய அன்பை
பின்னி இறுக பற்றும்
உறவுகள் பந்த பாசம்
தந்த நேசம் யாவும்
நமது மனதில்
நிலைத்து நிற்கும்
வைரம் போல் மின்னும்
மகிழ்ச்சி என்றென்றும்
தரும்-
அன்பே என் ஆருயிரே
உன்னோடு இருக்கும் வரை இந்த இதயம் துடிக்கும் உனக்காக-
பாடங்கள்
தினம் தினம்
கற்று தரும்
புதியதொரு
வாழ்கையின்
பரிணாமம்
அவற்றின்
சில
புரியாத புதிராகவே
அடிக்கோட்ட வரிகளாக
மீண்டும் மீண்டும்
படிக்க அறிய வரும்
-
விடிந்த பின்பும்
கனவுகளின் ஏக்கம்
கண்களில் உந்தன்
ஞாபகம் பிம்பம்
நீ வருவாய் என
தவிக்கும்
இவளின் நெஞ்சம்
விழிகளில் உறக்கம்
தொலைக்கும்-
விடியலை ரசித்திட
அதிகாலையில் நடைபயணம்
இளைப்பாற
கடற்கரை காற்றோடு
கரம் கோர்த்து மனம் நேசிக்க
ஆயிரம் ஆயிரம்
கவிதைகள் எழுதிட
ஆதவனின் சுடர்
கண்களில் கூச்சம் தர
வானில் பறக்கும் பறவை
உன்னால் முடியும் என
தன்னம்பிக்கை தர
மீண்டும் புதிய பாதையில்
பயணிக்கிறேன்-
மொட்டாகி
செடியின்
வேர்களை பயன்படுத்தி
நீரை உறிஞ்சி
அந்தியில
உதிரும் மலரினை
மாதிரி தானே
நம் உறவுகள் எல்லாம்
தேவைகள் முடிந்ததும்
உடைந்த மலராக
நம்மை விட்டு
உதிர்ந்து
பிளவு பூ போல்
உதரி விட்டு செல்லும்
தீயினால் சுட்ட புண்
போல வார்தைகளை
பற்ற வைத்து கொல்லும்-