Treadmill மேலே
நத்தை போலே
நகரும் இந்த நாட்கள்
மாறாதோ..
Elevator படிகளாய்
இழுக்கும் காலம்..
நானோ எதிர்பக்கம்
நோக்கி ஓட..-
என்னை பொறுத்தவரை,
"ஏன் எழுதுகிறாய்?"
என்ற கேள்விக்கும்,
"ஏன் சுவாசிக்கிறாய்?"
என்ற கேள்விக்கும்
ஒரே பதில் தான்!!❤️-
"சாதி இல்லை" என
இத்தனை பேர்
கத்தியும்,
யாரும் நம்பியபாடில்லை..
"இருக்கு" என
சொன்னவனை மட்டும்
இன்றும் கண்மூடித்தனமாக
நம்பும் இவர்கள்!!-
நஞ்சா? அமுதா?
என அவள் பெயரில்
ஏன் கேள்விக்குறி?
அமுதா? - அமுதே!❤️-
அவள் Bra strap
வெளி தெரிந்ததால்
முகம் சுளித்துப் போனார்
முட்டியை தான்டி லுங்கி
ஏற்றி கட்டிய அந்த
கலாச்சார காவலர் !-
அந்த தண்ணீர்
தொட்டியில்
அவர்கள் கலந்த
மலத்தை
அவர்களின் மூளையோடு
ஒப்பிட்டு பாருங்கள்,
பெரிதாக வித்தியாசம்
இருக்காது!-
~ பொங்கல் அன்று வெளியே செல்லாதீர்கள்
~ஏன் கறும்பு என நினைத்து விடுவார்களா?
~ இல்லை, "செம்ம கட்டை" என நினைத்து பொங்கலுக்கு விறகாக வைத்துவிடுவார்கள்-
"தாடி அழகா இருக்கு"
என அவள் சொன்னதும்..
வெறும் மயிருக்கும்
விலையேறிப் போகிறது!!
வெட்கம் தலைக்கேறி
போவதாலோ?❤️-
அந்த கவிதையை
ஏன் குப்பையில்
போட்டு கொல்கிறீர்கள்?
Insta feed - ல்
இருபது likes உடன்
உயிர்வாழ்ந்துவிட்டு
போகட்டும்❤️
-
Actually socializing
Isn't a survival need!
We're just living
Like stars in the sky..
சிலவை நெருங்கியும்
சிலவை தொலைவுற்றும்
காணப்பட்டபோதும்,
மின்ன மறுத்ததில்லை
நட்சத்திரங்கள்..
#introvert_things❤️
-