Kavitha Kavitha sreeni   (Kavitha Kavithasreeni)
600 Followers · 60 Following

Joined 10 May 2020


Joined 10 May 2020

கட்டணமில்லாப் பேருந்து
நெருக்கடியை சமாளிக்க உதவும்
மாத பட்ஜெட்

-










கூட்டமில்லாப் பேருந்து
இருந்தென்ன பயன் இங்கே
வெற்றுச் சுருக்குப்பை

-



கட்டணமில்லாப் பேருந்து
நெருக்கத்தைப் பொறுத்தால் கிடைக்கும்
குழந்தைக்கு ரொட்டி

-





உலக தத்துவத்தையே
விளங்கச் சொல்லும் எனக்கு
ஏனோ
உன் மனப் புத்தகத்தின் அத்தியாயங்களை மட்டும் இன்னும் புரட்டிக் கொண்டுதான் இருக்கிறேன்

-


28 AUG AT 11:12


சாலையில் கவனக்குறைவு
சிதறிய கண்ணாடித் துண்டுகளில்
உறையாத ரத்தம்

-


28 AUG AT 11:07

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சக்கரத்தில் சிக்கி மீளும்
கண்ணாடிச் சிதறல்கள்

-


28 AUG AT 11:02

சிதறிய கண்ணாடிகள்
அள்ளிச் சுமந்தபடி நகரும்
அவசர ஊர்தி

-


28 AUG AT 10:41

சிதறிய கண்ணாடிகள்
சேதமின்றி தப்பித்தது
ஓட்டுநர்களின் உயிர்

-


27 AUG AT 23:56

வேழமுகம்

பச்சரிசி அச்சுவெல்லம்  பண்டங்கள் தான்படைத்(து)
இச்சையுடன் கும்பிடுவோம் இன்றவனை - நிச்சயமாய்
வேண்டியதைத் தந்திடவே வேழமுகம் வந்துதிக்கும்
காண்பதுவே என்றும் கனிவு

-


26 AUG AT 8:34

நெடுநேர கண் விழிப்புக்கு பின்
நெருங்கிய நித்திரை...
சாளர இடுக்கு வழி நுழைந்துக் கலைக்கிறது
இளஞ்சூரியன்

-


Fetching Kavitha Kavitha sreeni Quotes