நவீனத்துவத்தின் விளைவு
அகத்தின் அழகு
முகத்தில் தெரிவதில்லை
புகைப்பட வடிப்பான்கள்!-
*Love to write.
*Quotes Background image courtesy:GOogLe + YQ
read more
நின் பசுமை எழில் வதனம்
நெஞ்சை அள்ளுதடி..
நெக்குறுகி நான் உனைப் பார்ப்பதால் உனக்கும் நாணம் வந்ததோடி..
நின்னைத் தீண்டிடத்தான்
மேகங்கள் திரட்டி வந்தேனடி
உயிராய் உன்னில் இறங்கிடத்தான்
காற்றுக்கும் தூது விட்டேனடி
நெல் நாற்றுக்கு சேதி வந்ததோடி..??-
Behaving wisely is much more better than Promoting safety technologies for dreadful diseases.
-
உங்களுக்கு
வேண்டாமென்பதை
மற்றவர்களிடம்
திணிக்காதீர்கள்!
முடிவெடுக்க
அவர்களுக்கும்
உரிமையுண்டு.
-
எண்ணி மகிழ்வதற்கு காரணம்
ஒன்றுமே இல்லையா..!
பரவாயில்லை.
நம்மைச் சா(சே)ர்ந்தோரின்
வளர்ச்சியில் விளைந்திடும் அது.
-
ஆள் யாருமில்லா அடர்வனந்தனிலோ
அதரங்கள் அசைந்திடா மௌனத்திலோ
தொந்தரவுகள் இல்லா தொலைதூரத்திலோ
தவம் மேற்கொள்வதென்ன வாழ்க்கை..?
சூதும் வாதும் புடைசூழ் புவியில்
பொய்யும் புனைசுருட்டும்
மலிந்த நிலையில்
தந்திர நரிகளின்
நர்த்தனங்களுக்கு நடுவில்
பச்சோந்தி பிரதிகளான பல
முகங்களுக்கு மத்தியில்
மூச்சு பிடித்து முட்டி முளைத்து
நிமிர்வதன்றோ ஆகச் சிறந்த பெருந்தவம்!
-
இருத்தலை
இயன்றளவு
இயற்கையும்
இருத்தித்தான் வைத்து
இருக்கிறது...
புணரமைக்கின்றோம்
பேர்வழி என்று - பாவம்
புலம்ப வைத்து விட்டோம்
பூமியை!-
வளங்களின் வாசலுக்கு
வாடகைக்கு வந்தவர்கள்
நாம்.
அவை எனக்கானவை
என்பதற்கு
எள்ளளவும் உரிமையில்லை.
-