இயற்கையின் தேவை
யென்றென்றும்
எழில் கொஞ்சும்
வளங்களைக் காக்கும் மாமனிதனையே தேடுகின்றாள்
விலைமதிப்பில்லா பொக்கிஷமாய்
பெட்டகத்து பேழையென கவனமாய் பார்த்திருந்து
பசுமை காக்கும்
மனிதரைத் தேடி ஓடுகிறாள் வற்றாத ஜீவநதியோ
கொட்டும்
மழையருவியோ
வானளாவிய மரங்களோ
இலை கொடி செடிகளோ எவற்றையும் அதனதன் உரிமையிலே தலையிடா வண்ணம் மனிதர் தாம்
வாழ்ந்து வந்தால்
இயற்கை தான் சீறுவாளோ
பெருவெள்ளம் கொடுப்பாளோ ஆழிப்பேரலையாய் ஆட்டமிடுவாளோ
நாகரிகத்தின் உச்சவரம்பாம் நெகிழிக் குப்பை தனை ஒதுக்கியே வைத்திட்டு- இயற்கைக்கு
தீங்கான பொருள்தனையே தவிர்த்திட்டு
பாங்கான பாதை சென்று பொன்னான மண்ணை பக்குவமாய் காத்து நின்றால்
இயற்கையன்னை பூரிப்பாள் இதயமதை தந்திடுவாள்!!-
புதிய மலரின்
பொலிவு போல
புதிய நாளதுவும்
புத்துணர்வு தரும்-
நாட்களுமே உதிர்ந்து விடும்
நாளுமே இமையாமல் உழைக்க பலனுண்டு-
நாளையும் பூக்கும்
புது மலரெனவே
வாடா முகத்தோடு
வரவேற்பாய் நலமுடன்
-
மஞ்சளன்றோ
அவளின் நிறம்
மானின் துள்ளல்
அவளின் துள்ளல்
வெஞ்சினத்தை
அடக்கிடுவாள்
வெண் சிரிப்பை
தந்திடுவாள்
பஞ்சு மெத்தை
அவளின் பாதம்
பாலின் வெண்மை
அவளின் மனம்
படபடக்கும்
அவளின் பார்வை
பரபரக்கும்
அவளின் செய்கை
தேவதையின் சாயலிலே
மாயவித்தை செய்திடுவாள்
பேச்சினிலே மயக்கிடுவாள்
மாட்சியிலே
ஒளிர்ந்திடுவாள்
பாகு போல்
உருகும் நெஞ்சம் பார்ப்பவரெல்லாம் அவள் தஞ்சம்!!!!-
மண்ணை பிடித்து
வானை பார்க்க
விதையோ எழும்
கொழு கொம்பினையே
கட்டித் தழுவி
கொடியோ எழும்
பிறந்த மீன் குஞ்சு
தானே நீந்தும் எதிர்ப்பாராதே தாயின் கரமே
முயன்றவர் என்றும்
தோற்றவரில்லை
முடியாதது என்று
ஒன்றுமே இல்லை
விழியை நிமிர்த்தி
வழியை நாடு
முன்னேற்றம் காண
முயன்றே சாதி
கயிற்றால் ஏறி
மலையை முட்டு
விண்ணும் எட்டும்
உயர்வன கிட்டும்
மனதில் யோசி
மலையும் தூசி-
பாவையே! பதுமையே!
சித்திரமே! விசித்திரமே!
ஆதியிலே பாதியே
மேதினிலே சோதியே
பனி படர்ந்த மா மலரே
பாக்களிலே கருப்பொருளே
உயிருக்குள் உயிர் வைத்தாய்
உதிரத்தை ஈந்துவந்தாய்
இடருக்கே இடருவைத்து
இன் முகத்தை தருவாயே
வெண் காந்தள் விழியாலே வீரத்தை ஓதுவாயே
பஞ்சொத்த மென்மை கொண்டும்
பாறையொத்த திடம் கொண்டனை
நெஞ்சினிலே கனல் கொண்டும்
நாவினிலே தேன் கொண்டனை
அமுது படைக்கும் ஆரணங்கே அமுதே திகைக்கும் பேரழகே
பண்பினிலே சிறந்தவளே
பார் போற்ற வாழ்வாயே!!!
-
கதிரவன் தன்னை துதித்திடுவோம்
உழவனை நாமும் மதித்திடுவோம்
இனிமை எங்கும் பரவட்டும் செழுமை எங்கும் சிறக்கட்டும் நன்மை யாவும் தழைக்கட்டும்
நன்னிலம் யாவும் பெருகட்டும்
வளமே பாரில் கொழிக்கட்டும் வாழ்வியல் தம்மை உயர்த்தட்டும்
உழவுத் தொழிலே பெருகட்டும் இயற்கை வளமே செழிக்கட்டும்
தை மகள் அவளே வந்தாளே இனிதே அவளை வரவேற்போம்!!-