தமக்கையெனும் வடிவில்
முதல் அன்னையாய்
மாறியவளுக்கான
இரங்கல் கவிதை..!
👇👇-
பாடகனே இழந்தனே !
பாடிய வரிகளை மறப்பேனா !
மூச்சை உள் நிறுத்தி பாடினாயே !
சுவாசிக்க ஏன் மறந்தாய் !
கிருமியால் சாகவில்லை !
புழுவாய் ஊடுகிறது உன் பாடல் , எல்லோர் மனதிலும் !
காதலுக்கு நீ ,சோகத்திற்கு நீ எதை நினைத்து நான் சிந்துவது கண்ணீரை 😰😰-
ஒளியை குடிக்கும்
இருள்...
மை குடிக்கும்
தாள்...
விழிநீரை குடிக்கிறது
உந்தன் வரிகள்...
~ க.கொ.மணிவேல்...🖋-
இவர் இதயத்தின் ஈரம்
மண்ணில் புதைக்கப்பட்டது 2015ல்
புதைக்கப்பட்ட இடத்தின் ஈரத்தையும்
சுரண்டத்தான் கனவுகான சொன்னாரோ;
2020ல் வல்லரசு ஆகாவிடிலும்
இருக்கும் வளமாவது சுரண்டபடாமல்
இருக்கவேண்டும் என்ற கண்ணீர் மட்டும்
கண்களில் ஈரமாய் மிச்சம்...😭😭😭🖤🖤-
எரியும் மெழுகுவர்த்தி
உன் கவலைகளை எரித்ததால்
இரங்கலை விட்டு இறங்கி வருக!
மீண்டு எழுக! மீண்டும் தொடர்க!
மெழுகை ஊதி பிறந்த தினத்தை
கொண்டாடி இனிப்பு தருக🎊🎊🎊-
நகைச்சுவையால் வாழும்நாயகர்கள்
பலர் இருந்தாலும்
உமக்கு ஒரு வழியை பின்பற்றி
நயம்பட எடுத்துரைத்தாய்!!*
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தாய்
சின்ன கலைவாணர் என்று
பாமர மக்களின் பாசத்தால்
பட்டமாய்பெற்றாய்
இயற்கையைநேசித்து
நீ பிறந்த தாய் நாட்டையும்
பேணிக்காக்க முயற்சித்தாய்
எம் நாட்டு இளைஞர்களின்
ஊக்க தூண்னே ஏன் சரிந்ததாய்
மீளா துயரில் ஆழ்த்தி
மீண்டுவர இடம் சேர்ந்தயோ
😭😭😭😭-
காஞ்சு போன வானங்கூட,
கரைஞ்சு போயி அழுகுதம்மா!
பலநாளாப் படுத்துக் கிடந்த
வீட்டு மூளை ஒழுகுதம்மா!
பச்சப்புள்ள சிரிப்பெங்க!?
பல்லுப்போன பேச்செங்க!?
தொந்தி ரொம்பத் திண்ணாலும்
இன்னும் கொஞ்சம் திண்ணச்சொல்லி
இம்சை செய்ய நீ எங்க???!!!
எங்க ஆச்சி நீ எங்க?!!-
உயிரை உயிருக்குள்
உயிர்ப்பிக்கும்
உன்னத கலைஞன்
புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகிறான்
விவேக
விருட்சமாக
ஓம் நமசிவாய 🙏-