வேட்டையில் எதுவும் மாட்டாததால்
வேடன் வீட்டில் ஒரே அமைதி(கவலை)
வேட்டையில் எவரும் மாட்டாததால்
பறவை கூட்டில் ஒரு அமைதி(நிம்மதி)-
Send android notification
Without delay or don't send
(an hour before 🙄)-
கடும் புயலின் சீற்றம் நீ
சுழல் பொழுதின் மாற்றம் நீ
குழல் வழிசேரும் காற்றும் நீ
எல்லாமே நீ எல்லாமே நீ
கவி வரியின் பாக்கள் நீ
தேன் மறையும் பூக்கள் நீ
வான்வெளி நீளும் விரிவும் நீ
எல்லாமே நீ எல்லாமே நீ
பிறை நிலவின் மிச்சம் நீ
தமிழ் மொழியின் உச்சம் நீ
நதி கடல் யாவும் நீரும் நீ
எல்லாமே நீ எல்லாமே நீ-
1. உலகை Remoteலி இயக்க முடியும்.
2. பத்தாயிரம் சம்பாதிப்பவனை ஐம்பதாயிரத்திற்கு பொருள் வாங்க வைக்க முடியும்.
3. வங்கியில் வாங்கினால் கடனல்ல EMI என்ற மனநிலை.
4. சுய தொழில் உணர்வை அச்சுருத்த முடியும்.
5. எந்த ஒரு கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் அசைத்து விட முடியும்.
என்பதை பெரு முதலாளிகள் உளவியல் மற்றும் டிஜிட்டல் யுக்தியின் மூலம் நிரூபித்தது.
-
மாறுவேட போட்டியில் ஹிட்லர் வேடம்
அணிந்திருந்த குழந்தை தன் தோழி
இந்திரா காந்தி வேடத்தில் ஒப்பித்து
முடித்ததும் கட்டி அணைத்து முத்தம்
கொடுத்தது.-
வாழ்நாளில் ஒவ்வொன்றாய்
வரலாற்றின் பக்கங்களில் சருகாக🍁
பயனுள்ளதாய் சில🍀
பயமுள்ளதாய் சில🍁
காதலில் சிலிர்த்து சில🍀
காயமாய் வலித்து சில🍁
உணர்வின் வண்ணமாய் சில🍀
உணர்ச்சி வசமாய் சில🍁
சருகானாலும் எருவாகட்டும்🌱
வரும் நாட்கள் அழகாகட்டும்🌺-
எரியும் மெழுகுவர்த்தி
உன் கவலைகளை எரித்ததால்
இரங்கலை விட்டு இறங்கி வருக!
மீண்டு எழுக! மீண்டும் தொடர்க!
மெழுகை ஊதி பிறந்த தினத்தை
கொண்டாடி இனிப்பு தருக🎊🎊🎊-
அன்பும் அணைப்பும்
கதகதப்புடன் உறக்கமும்
காதலும் காமமும்
காலை வேளை குளிரும்
தனல் மூட்டும் விரகும்
விதை வெடித்த மரமும்
கிளைதோரும் குயிலும்
தோலோடு கிளியும்
தோல்வியில்லா வழியும்
விரும்பும் யாவும் வேண்டும்
விரும்பும் வரையே வேண்டும்
-
நிலவின் உதிரியோ! இரவின் உதிரமோ!
புள்ளியிட்டு பாதியில் விட்டது ஏனோ!
அவரவர் கற்பனை கோலம் போடத்தானோ!
-