அடுத்தவரின் உழைப்பையும்
ஊதியத்தையும் அபகரிப்பவர்
தன்னிலை இயலாதவர்கள்...
வஞ்ச புகழ்ச்சி*
— % &-
✍️என்னவள்...
✍️எனக்கானவள்...
✍️என் உயிருக்கும் மேலாய்
கவிதையை காதலிப்பவள்........ read more
அனைவரின் மனதின்
எண்ணவைரங்களை
மின்னவைக்க
உலகிற்கு எடுத்துரைக்க
YQ ஆஃப் அமைத்ததற்கு
நன்றி கண்மணி....-
நான் எழுதிய முதல் வார்த்தை
எனது கையொப்பம்
உனது முதல் எழுத்தில்....-
இருப்பதும் ஒரு சுகம்
இடைவிடா நெருக்கத்தில்
தொலைவதும் ஒரு சுகம்...
-
எழுத்துக்களின் எழுத்துப் பிறையாய் இருந்த எனது கர்வம்
எழுத்துக்களின் அர்த்தங்கள் ஆக மாறியது ஏனோ.....
பக்குவம் என்ற பாசி படர்ந்து விட்டதாலா
இல்லை ......
புரிதல் என்ற விசித்திரம் நிறைந்து விட்டதாலா-
பிரிய மனமின்றி
என் இதயத்தை விட்டுச்செல்கின்றேன்
இருக்க இடமின்றி
என் உதிரத்தை விட்டுச்செல்கின்றேன்
உறைய மனமின்றி
இறுதியில்.......
என் உயிரை விட்டுச்செல்கின்றேன்
உலவ உரிமையின்றி...!
விழி வழியே
வழிந்தோடும் கண்ணீர்....
வலி நிறைந்த
வார்த்தைகளாய்....!-
"அம்மா" நாம் ஆசைபடுவதை
நினைக்கும் போதே
வாங்கி தருவார்...
"அப்பா" ஆசைபடுவதை
கேட்டு வாங்கி தருவார்...
எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும்....
ஆனால்.....
"கணவர்" ஆசைபடுவதை கேட்டால்கூட
வாங்கி தர மாட்டார்....
இதுதான் அம்மாபா விற்கும்
கணவர்ர்ர்கும் உள்ள வித்தியாசம்🤦♀️-
ஒருவரை பற்றி மற்றவரிடம்
விமர்சிப்பதற்கு முன்
சரியா என யோசிப்பதும்
அவர் விமர்சனத்தை
நம்புவதற்கு முன்
அவர் எப்படிப்பட்டவர்
என விசாரிப்பதும்
மிகவும் அவசியமான
செயலாகும்.....!-
ஏன் என்னைத்
தேடி வந்தாய்
சொல்லாமல் நகரும்
நாட்களில் .....
நில்லாமல் என்னோடு
பயணிக்கும் ...
நிரந்தரம் இல்லா
உறவென...!-