மழைத்துளிகள் போர்த்திற்கும்
மலர்களைக் கண்ட
வண்ணத்துப்பூச்சிகள்
தன் காதலினால்
நாணம் கொண்டது மலர்கள்
என்று நினைத்து
காதலால் கூடல்
கொள்கிறதோ!-
ஆனால் , கவிதை பிறப்போ
அப்பா தந்தது.
*கருவாச்சி (ML)* காதலின் அடையாள... read more
போட்டிகளும்
பொறாமைகளும் இல்லாத
உலகம் மட்டுமல்ல
குடும்பங்களும்
இருப்பதில்லை
ஆரம்பத்தின்
முதல் அத்தியாயம்
இங்கிருந்து தான்
தொடங்குகிறது.-
புதிது புதிதாக காட்சி தரும்
கனவு உலகத்தில்
கதாநாயகனும் காவியத்தலைவனுமாய்
என்னவன் மட்டுமே
நிறைந்து நிலைத்து ஆட்சி செய்கிறான்.-
முளைத்து கொண்டே இருக்கிறது
நம் பிரிவுக்குப் பின்பும்
பிரியாத காதலின் துளிர்கள்-
பல நேரங்களில் எனது அமைதிக்கு காரணம்
அவள் சிந்தும் கண்ணீராக மட்டுமே இருக்கும்.
என்னவளின் ஒரு துளி கண்ணீர்
என்னை நிதானமிழக்க செய்துவிடும்-
அவள் பேசாத நாட்கள்
நிலவிருந்தும் ஒளி பெறாத
வானம் போல்
என் வாழ்வையும் இருள் சூழ்ந்திருக்கும் .-
கேள்வியாக நான்
என்றும் இருக்க விருப்பமில்லை
கேள்விகள் அற்ற பதிலாக
தனித்தே விளங்க
சோர்வுகளற்ற பயணங்களை
தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.-
என் இனிய இசையே
எங்கும் எதிலும்
நீ நிறைந்திருந்தாலும்
எவராலும் எளிதில்
உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
உன்னை என்றும்
உளமாற உள்வாங்கி
உணர்வுகளில் வேரூன்றி
உன்னை அணு அணுவாக ரசித்து
தேனாக சுவைத்து
திகட்டாத அளவு பருகி
திளைக்கும் இன்பத்தை
அனுபவிப்பதை அறிந்தால் தான்.
சற்றென்று ஒட்டிக்கொள்ளும்
மென் துகள்கள் போல்
மெய்யுடன் பரவி
உருகி கலந்து விட்டதை
உணர்ந்தறிய முடியும்-
கலங்கமற்ற நிலவொளியில்
கதிர்களற்ற களத்து மேட்டில்
கரையில் இருக்கும் கூரை வீட்டில்
கதிர் அறுத்த களைப்பில்
கம்மஞ்சோறும் நீர்மோரும்
ஒன்று சேர்ந்து குடித்திருக்கயில்
கோடி செல்வம் கொட்டி கொடுத்து
வாழும் வாழ்க்கை ஒதுங்கிப் போகும்
களத்து மேட்டு காத்த வாங்கி
வாழும் விவசாயி
மன நிறைவில்-