மகளென மனதார பாவிக்கும்
மாமியாருக்கோ மனதளவிலும்
ஈரமற்ற மருமகள்..
தாயென தாங்கும் மருமகளுக்கோ
அவளை தாயக்கட்டை போல்
உருட்டி தாளித்திடும் மாமியார்..
மாமியாரும் மருமகளும்
விரிசலொன்று அமைத்து
விட்டுக்கொடுக்காமல்
மல்லுக்கட்டும் மல்யுத்தம்..
இரண்டும் சரியாக
தாயாயும் சேயாயும் கூடிவாழும்
ஒருகூட்டு பறவையாய் இன்னும்
சில மாமியார் மருமகள் இப்புவியில்
ஆங்காங்கே அழகாய் வாழ்ந்துக்
கொண்டுத்தான் இருக்கிறார்கள்..!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
பிறக்கப்போகும் பெண்மகவுக்காய்
ஐந்து வயது மருமகனுக்கு
அத்தனை வித்தையையும்
ஆசையோடு அறுசுவையும் கூட்டி
தத்தையாக ஆக்கிவிடுகிறாள்
அத்தை நல்ல அத்தையென்று...
-
அவள் தாய்க்கும்
ஒரு கோவில் கட்டுவேன்!
என் தேவதையை சுமந்த
தெய்வத்தை வணங்குவதற்கு...-
உள்ளே வெகு நாள் முன்
நான் தொலைந்த ஏதோ ஒன்று
அவளை பார்க்கும் போதெல்லாம்
தவிர்க்கவே முடியாமல்
முத்த மழையாக.....
அவளோடு குழந்தையாக மாறி
உள் வழிந்த தாய்மையை
சொல்ல வழியே இல்லையோ??
சொல்லிவிடும் முயற்ச்சி தான்
முத்தமோ???
உன் சிறுமுருவலில்
நான் இசைந்து போகிறேனடி
அடம்பிடிக்கும்
உன் ஆசைக்கெல்லாம்.
இனிப்பை சுவைக்கிறேன் காதில்
நீ என்னை அத்தை
என அழைக்கும் போது.
எண்ணங்களோ எதிர்பார்போ
இல்லாத உணர்வு
இரு கழுதை வயதில்
முதல் முறையாக
மூளையில் உன்னால்.
#குட்டி நண்டே.... வருனிகா.....
-
ஹே அத்தை மகளே
நீ அத்தோரம் போகும் போது
அத்தானும் வரேன் டி...
உன்னை உதட்டோரம்
பாக்கும்போது உசுருதான்
குடுக்க தோணுது டி...
உன் கண்ண பாத்தாலே காதல்
சும்மா போதையா ஏறுதடி..
உன் மாமா நான் உன்ன
மணிகணக்கா பாக்குறேன் டி..
நீயோ அந்த மடிகணினி
பார்த்த என்ன அர்த்தம் டி..
பதில் சொல்லடி என்
மாமன் பெத்த மரிகொழுந்தே....
-
ஐந்து பெண்கள் பெற்ற
அரசனும் ஆண்டியாவானாம்
அப்படியல்ல என்று
பாசம் காட்டிய இளவரசனின்
திருமணநாள் இன்று
பாசம் காட்டிய நெஞ்சத்திற்கு
நேசக்கரம் நீட்டி
இளவரசனை மகாராஜாவாக்க வந்த
மகாராணியின் வருகைக்கான
வசந்த நாள் இன்று
26 ஆண்டுகளுக்கு முன்பு
மணப்பெண் என்பதால்
"பெண்அத்தை" என்று அழைக்க தொடங்கி
இன்று " பொன்னத்தை" என்று மருவி போனது
ஆனால் அன்றைவிட இன்றே பொருத்தம்
குணம் மங்கா
" பொன் - அத்தை" அவள்.
தாய் மாமாவிற்கும் என் அத்தைக்கும்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
-
முகபூச்சுக்கே போட்டியா உருண்ட மஞ்சள் அரச்சு அவ முகத்துல தான் தேச்சு நோ்த்தியா திலகமிட்டு
பஞ்ச வா்ண தாவணி கட்டி
டசன் டசனா கல்வளையல் போட்டு
காலுக்கொரு சலங்க கட்டி
ரெட்ட சடை கட்டி அதற்கிணையா மல்லி வச்சு
அத்த மக வரானு அவள கொஞ்சம் வம்பிலுக்க
அதுவரைக்கும் வாயடிச்சுக்கிட்டே எள்ளு காயாட்டம் நிமிா்ந்திருந்தவ
என்ன கண்டதுமே வெளஞ்ச நெற்கதிராட்டம் தலைய குனிஞ்சு நிக்குறா
வேகத்துல குனிஞ்சாளா வெட்கத்துல குனிஞ்சாளானு நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன்
வேகத்துல குனிஞ்சிருந்தா அவங்கப்பனோட வந்திருப்பா
வெட்கத்துல தான் குனிஞ்சேனு அவ சொல்லாம சொல்லிபுட்டா!!....
-
என்னோடு முரண்பாடு எழும்போது..
மாமியாராக இருப்பவர்...
என்னவரோடு சண்டை என்றால்..
எனக்கு தாய் ஆகிறார்...
இதற்கு பெயர் தான் கொடுத்து வைத்தல் என்பதா?? 😍😍-