இதமான காலை
-
பிடிப்பது தமிழ்
என் பெற்றோர்கள் இந்த பூமியில் என்னை பதிவு நாள் டிசம்பர் 1... read more
அதிகாலை எழுந்து
ஆயில் பாத் எடுத்து
பட்டாடை போல்
புத்தாடை உடுத்து
பக்தியுடன் பரமசிவனை தொழுது
பரவசமாக பந்தியில் அமர்ந்து
திகட்ட திகட்ட தின்று முடித்து
அப்பாடா என்று சொல்லாமல்
அடுத்து தான் ஆட்டம் என்று நினைத்து
அமர்களமாக ஆடிபாடி
பட்டாசு வெடித்து
தீபங்கள் ஒளியிள்
இருளும் நம் வாழ்வின் துன்பமும்
களைந்து மகிழ்வாக
வாழ வாழ்த்துவோம், நாமும் வாழ்வோம்
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்🎉🎊-
செய்ய நினைக்கும் செயலை
நான் மறக்க,
அதை செய்து முடித்தாயா
என நண்பன் கேட்க,
தலைகுனிந்து
நான் நிற்க,
கண்களோ தீயாய்
என்னை எரிக்க,
இறுதியில்
கைகோர்த்து நாம் செய்யலாம்
என்றழைக்க,
எனக்கு மட்டுமல்ல
செயலுக்கும் அவள்(ன்) நண்பனே-
மேன்மையான மனதுடன்
தொடர்புடையது
விழிப்புநிலை மனத்துடன்
இருக்கும்
எந்தவொரு
பாரபட்சமும் இல்லாமல்
அலாதியாக அன்பாக அமைதியாக
இருப்பதே
என்னின் இவ்வுலகின்
நிலைத்திருக்கும் நிலை-
எல்லாம்
பொய்கள் எனும் பெயரில்
பூமியை
வட்டமாகவோ
சதுரமாகவோ
செல்வகமாகவோ
வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
மாறாய்
அவை தான் உண்மை
எனும் தருணம் அப்படியா
என அண்ணாந்தும் பார்க்க வைக்கிறது
இந்த மனித இயல்பு-
ஹே அத்தை மகளே
நீ அத்தோரம் போகும் போது
அத்தானும் வரேன் டி...
உன்னை உதட்டோரம்
பாக்கும்போது உசுருதான்
குடுக்க தோணுது டி...
உன் கண்ண பாத்தாலே காதல்
சும்மா போதையா ஏறுதடி..
உன் மாமா நான் உன்ன
மணிகணக்கா பாக்குறேன் டி..
நீயோ அந்த மடிகணினி
பார்த்த என்ன அர்த்தம் டி..
பதில் சொல்லடி என்
மாமன் பெத்த மரிகொழுந்தே....
-
ஆதவனுக்கு முன்பே
துயிலெழுந்து
அந்தி சாய்ந்தும்
வீடு சேராமல்
பயிர்களின் பசியை
போக்கிட்டு
உளமாற அதற்கு
உழைத்து
சென்று வருகிறேன்
என கூறி
வீட்டிற்கு வந்து குடிக்கும்
கால் கஞ்சி - அது
சொல்லும் இளைபாறலின்
ஈடுஇணையில்லா மகத்துவத்தை
-
மங்கையே என்
மணமோ
மறுநிமிடம் மறைந்துவிடும்
உன் மணமோ பார்போற்றும்
ஆதலால் வெளியில் வராதே
நான் மாளும் வரை-