வாழ்க்கையை வாழ எல்லோருக்கும் ஏதோ ஒரு கடினமான பிடிப்பு தேவைப்படுகிறது
சிலருக்கு மானம்,
சிலருக்கு கடவுள்,
சிலருக்கு பணம்,
சிலருக்கு புகழ்,
சிலருக்கு போதை,
சிலருக்கு குடும்பம்
சிலருக்கு எதுவென்று தெரியும் முன்பே முடிந்து விடுகிறது வாழ்க்கை.!!!
-
உடைந்த கண்ணாடி துண்டுகளாக இருந்துவிடுங்கள்
மேலும் உடைபடுவதற்கான வாய்ப்பு குறைவு
முக்கியமாக கையாள தெரிந்தவர்களால் மட்டுமே
காப்பாற்றபடுவீர்கள்
காதலிக்கபடுவீர்கள்.!!!-
குரங்கு மனமே
கொஞ்சம் மெதுவாக தாவு
உன்னுடைய வால் அறுக்கப்பட்டு இருக்கிறது.-
எல்லோரும் ஒரு நாள்
எனக்கோ அல்லது
நான் அவர்களுக்கோ பேரிலப்பை தர போகிறோம் என்பது நிச்சயம்
எனினும்
இன்று நாம் (நான்)சந்தோசமாக இருந்தோம்(தேன்) என்பது எனக்கு போதுமானதாக இருக்கிறது.-
என்மேல்
அதீத அன்பு செலுத்தாதீர்கள்
என்னை நான் மறந்து விடுகிறேன்
மீட்டு எடுப்பதென்பது மிகவும் கடினமாக இருக்கிறது.-
வார்த்தைகளால் வாழ்க்கையை கட்டிபோட முடியுமா ?
இரக்கம் தேவையில்லை இறக்கம் கொடுத்து இருப்பதை இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் ஒரு நட்பு போதும்.
எதார்த்தம்
சிலருக்கு எதோ அர்த்தம்
அவர்களாக ஆக வேண்டாம்
அவர்களை ஆக்குங்கள் அவர்களாக-
நகரங்கள் அதன் நதிக்கரை ஓரங்களில் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது
நாற்றம் கொண்ட பிணங்களாக நெகிழி தாள்களுடன்
கீழ் வரிசையில் கிராமங்களும்!!-
காதலில்
நினைவுகள் ஏனோ நிழற்படமாக இல்லாமல்
காலத்திற்க்கும் அழியாத கல்வெட்டுகளாகி போவது(னது)
தான் நிதா்சனம்..-