விதைப்பவன்
ஏக்கம்
வெடித்து இருக்கும்
வயலில்...
துளிர் விடும்
புல்லின் பசுமை
போன்று-
வேர்வை துளிகளுக்கு
வேர்களோடு போராட்டம்...!!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்
முழு கவிதைக்கு 👇👇👇👇
-
ஏமாற்றப்படுகிறோம்
என்ற போதும் ஏர் பிடிப்பதை
நிறுத்துவதில்லை
வயிற்றில்
அடிக்கப்படுகிறோம்
என்ற போதும் அனைவருக்கும்
அன்னமளிக்கத் தவறுவதில்லை
உழைப்பவன் இங்கே
கோவணாண்டியாக
இருக்க ஏய்த்துப் பிழைப்பவன்
ஏழடுக்கு மாளிகையில்
உல்லாச வாழ்வு
வாழ்வது தான்
வாடிக்கையாய்
போய்விட்டது...
-
மாட்டோடு சேர்ந்து
மாடாக உழைத்து
நாட்டு நலன் நினைத்தவனின்
நலனை நாடு நினைக்கலையே...-
கருவறையில்
விக்ரகரமாய் இருக்கும்
கடவுள்கள் மத்தியில்
களத்திலிறங்கி பயிர்
செய்து பசியை ஆற்றும்
விவசாயியையும்
கடவுளாய் பார்ப்போம்.-
நாற்றுகள் நட்ட காலம் போயி
நாட்டுக்குள்ள போராட வச்சுட்டீங்களே..!
நாங்கள் படும் துயரக் கண்டு
நாட்டார் மனசு இரங்களயோ..!
கோட்டை கட்டி வாழல நாங்க
கூடாரம் கூட போதுமையா..!
பசிச்ச வயிருக்கு சோறு போடுற
எங்க வயிற்றில் அடிப்பது நியாயம் தானோ.?
பிறர் சொத்தையா பறிக்கவா நினைச்சோம்.?
எங்க உழைப்பைத் தானே உரிமையோடு கேட்டோம்..!
விவசாயி நாங்க படும் கண்ணீர்
மக்களைத் தானயா பாதிக்கும்..?
மனசு நொந்து கேட்குரோம்
விவசாயி எங்களையும்
கொஞ்சம் வாழ விடுங்கையா..!
-
பயிர் இட்டு பல நாள்
கனவாய்
பகல் இரவு உறக்கம்
தொலைத்த
பசி போக்கும் படைபாளியின்
முகம் பார்த்து
வானமும் வாய் விட்டு சிரிக்கிறது
மாயத்திரைக்குள்
-
உலகிற்கு உணவளித்தவன்
உணவின்றித் தவிக்கின்றான்
தூக்கமின்றி உழைத்தவன்
தூக்கிட்டு தொங்குகின்றான்
நம்மைப்பற்றி நினைத்ததால்தான்
நாதியற்று கிடக்கின்றான்
சட்டமன்றத்திலும் சபைகளிலும்
சாதகமாய் பேசிப்பேசி
சாகுபடி செய்தவர்களெல்லாம்
சாகும்படி ஆனது.
-
தங்களின் வாழ்வை பற்றி கவலை படாமல் வயிற்றில் ஈர துணியை கட்டி கொண்டு
ஏர் பிடித்து
இறங்கி உழைத்த்து தான் உன்
உயிரை
காப்பாத்துகிறான் ஒவ்வொரு விவசாயும்.....!
-