Iswarya Ramachandran   (இயற்கையின் காதலி💚)
87 Followers · 137 Following

Science Student
My life my rules
Tamil ponnu
Joined 19 October 2020


Science Student
My life my rules
Tamil ponnu
Joined 19 October 2020
8 APR 2022 AT 18:46

வாழ்க்கை பயணத்தில்
புதிர்களாய் சில உறவுகள்
இறுதியில் தனிமையே
நிலையான பதிலானது!

-


4 SEP 2021 AT 16:05

எனக்கான தலையெழுத்தை
நானே எழுத வேண்டும் என்று!
ஆனால் நிஜத்தில் யார் யாரோ
எழுதிவிட்டு செல்கிறார்கள்
பாசம் என்கின்ற போர்வையில்!

-


1 SEP 2021 AT 18:45

தேன் இதழ்களில் வர்ணஜாலம்!
ரோஜா இதழ்களாய்
சிவந்ததவள் கண்ணம்!
சிட்டாய் பறந்ததென் மனம்!
மதிமயங்கி போனது சிறுகணம்!
நீ தூங்கியது போதும் என
எழுப்பிவிட்டது கடிகாரம்!
இவை அனைத்தும் கனவுயென
அறிந்ததும்
என்மனமெல்லாம் ஒரே ரணம்🤪!

-


31 AUG 2021 AT 23:37

என் இதயம் என்றும் நீயிருக்கும்
திசையை நோக்கியே பயணப்படுகிறது!
அதற்கு எப்படி புரிய‌ வைப்பேன்?
நான் இருக்கும் திசைப்‌பக்கம் கூட
திரும்பிப் பார்த்து விடாதே என்று
நீ‌ இறுதியாக என்னிடம்
சொல்லி விட்டு சென்றதை!

-


31 AUG 2021 AT 1:35

கொஞ்சம் கூச்சத்துடனும்
தயக்கத்துடனும்
பேசிய சொற்கள்
இன்று இரக்கம்
காட்டாமல் வம்பிழுத்து
செல்லச்சண்டை
போட்டு விடுகிறது!
நெடுநாள் பழகிய
நெருங்கிய உறவு
என்பதை உணர்த்த!

-


31 AUG 2021 AT 1:21

அந்த வெண்ணிலவையும் பரிசளிக்க
உனக்கு கையோடு எடுத்து வந்தேன்!
பாவையே உந்தன் முகம் பார்த்தேன்
அந்த வெண்ணிலவும் பொழிவு
குறைந்ததாய் எனக்கு தெரியுதடி!

-


30 AUG 2021 AT 19:53

காலத்தை நிறுத்த கடிகாரம்
ஒன்று கேட்பேன்!
உன்னுடன் இருக்கும்
இம்மகிழ்ச்சியானத் தருணம்
இப்படியே உறையக் கூடாதாயென்று!

-


29 JUN 2021 AT 21:41

அவளின் அழகிற்கோ
பேரழகு!
அதை ஏக்கத்துடன்
பார்க்கும்
அவளிற்கு உரியவனாகப்
போகும்
நானோ பத்தடி தூரத்தில்!

-இயற்கையின் காதலி💚





-


28 JUN 2021 AT 18:23

யாருமற்ற தனிமையில்
சலிப்பான நேரங்களில்
எனக்கு உற்ற துணையாக
மாறிப் போனான்
இந்த உயிரற்ற நண்பன்!
என்னுடனே ஒட்டிக் கொண்ட
தொடுதிரை கைபேசி!

-


27 JUN 2021 AT 19:24

செந்தாமரையின்
வசம் மனதை
பறிகொடுத்த
மீனிற்கு
அதன் செவ்விதழ்
தீண்டாமல்
ஆசை தான்‌
அடங்குமோ?

-


Fetching Iswarya Ramachandran Quotes