-
Ilanthamizh ilavarasi
(இளந்தமிழ் இளவரசி)
127 Followers · 21 Following
😎🔥எதற்கும் அஞ்சாத எழுத்து
சமூகத்தின் சாரலோடு... பயணிக்கும்... 🔥🔥
அவ்வாறே பயணிக்க விரும்... read more
சமூகத்தின் சாரலோடு... பயணிக்கும்... 🔥🔥
அவ்வாறே பயணிக்க விரும்... read more
Joined 2 September 2019
29 FEB 2020 AT 21:26
பரிகாரம் / விமோசனம்
கோழியோ ஆடோ
கொன்று தின்னு
ஒருநாள் முழுக்க....
மறுநாள்
வீடு துடைத்து
விளக்கு வைத்து
குளித்து விட்டு
துவைத்த ஆடையை
தூய்மையாய் அணிந்து
கும்பிடு சாமி...
மனம் மட்டும் இருக்கட்டும்
அப்படியே....
மறுபடியும்
கொல்ல வேண்டும் அல்லவா...
மனிதன்
🤔😒😒-
1 FEB 2020 AT 5:51
மலர்
அஞ்சலி செலுத்துகிறது...
மலருக்கு யார்
அஞ்சலி
செலுத்துவது...?-
15 JAN 2022 AT 17:32
"வேலைக்குச் செல்லவில்லை"
என
சொல்ல மறந்தேன்,
அன்றாடம் எழுப்புகிறது
அதிகாலை அலாரம்...-
10 JAN 2022 AT 21:56
கண்ணீர் என்பது மொழியானால்
புரியாமல் போவது ஏனோ !
இது எவ்வித பிழையாம்?-
10 JAN 2022 AT 21:44
தெளிவான வானம்தான்
தெளியவில்லை ஏனோ
குழப்பத்தின் சுவடுகள்-
5 JAN 2022 AT 8:04
ஹைக்கூ
நவீனக் கொத்தடிமைகள்
கற்றது மறந்து
கைவிலங்கில் சிக்கினான்
நவீனக் கொத்தடிமை-
4 JAN 2022 AT 5:38
ஹைக்கூ
இரவு வந்தப் பின்னும்
பகல் தீரவில்லை
மனதின் நினைவில்...-