இருக்க
தொடும் தூரத்தில் நீ இருப்பதாய் எண்ணி
கண்ணாடியில் முகத்தைத்
தழுவும் விரல்கள்
நீயே கன்னத்தை தழுவுவதாக நினைத்து
வெட்கி சிணுங்கும் புன்னகை
யாரும் பார்த்தார்களா என்று தேடும்
திருட்டு பார்வை
தனிமையில் ரசித்திடும் உன் முகம்
தாளாத சோகத்தில் ததும்பும் கண்ணீரைத்
தடுக்கும் உன் யோசனை
என்னையே மறக்க வைக்கும்
என்னவனின் நினைவுகள்
என்ன பெயர் சொல்ல
ஏகாந்தத்தில் கூட இனிமை தரும்
எண்ணங்களுக்கு...?-
உடன் நடக்கும் போது உணராத உறவுக்கு
நீண்டு படுத்தபின் நிழல் தெரிகிறதாம்
வேதனை நிறைந்த உள்ளத்தின் முன்
வேடிக்கை காட்டும் கோமாளிகள்-
தந்தை தன்னுணர்வை
தாயாய் உணர்ந்து கொள்ளும்
தங்க மகளின்
தனி அன்பு...!
👇👇👇👇👇-
எப்போதும் வரும் ஏமாற்றம்
சிறு புன்னகைக்காக
சில நொடிகள் தாமதிக்கும் போது...-
அவன்
கை பட்டு பூத்த மலரோ..!
கண்பட்டு சிரித்த இதழோ..!
என்னதான் அதிசயமோ நீ.....
என்னவன் நினைவை
என்னுள் ஊட்டுகிறாய்.....-
விழிகள் மொழிகள்
ஆயிரம் பேசுவதால்
விழுங்கும் எச்சில்
வழி வார்த்தைகளும்
விழுங்கப்பட்டு
மௌனமே நிறந்தராமாய்
நிலைபெற்றது
நினைவிழந்து அந்த நொடியில்.....-
சிரிக்கத் தெரிந்தவனும்
சிந்திக்கத் தெரிந்தவனும்
சிலரது பார்வைக்கு
கோமாளிகள் தான்.....!!!!
பாவம் அந்த சிலருக்கு
தெரிவதே இல்லை....!!!!
வாழ்க்கை நாடகத்தில்
கோமாளியாக சித்தரிக்கப்பட்டவர்கள்
தாங்கள் தான் என்று.....!!!!-
காலத்தின் பிடியில்....கடிகாரம் போல்
காலை முதல்.....மாலை வரை
அன்னாந்து பார்க்கவும் நேரமில்லை.....!!!!
என்னன்னு கேக்கவும் யாரும் இல்லை.....!!!!
கூட்டுக் குருவிகளின்.....குடும்ப வாழ்க்கை
பறக்கத் தெரியா....பச்சிளம் குருவி
என்பதால் தான்
பாசமும் தெரியாமல் போனதோ....!!!!
~~~கலங்கிய கண்களுடன்~~~
-