இலவச வீடு வழங்கும் திட்டம்
குடிசை இல்லாத மாநிலம்
அனைவரும் வீடு.... திட்டத்தில்
"ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு "
என்ற பேனர் மறைத்துவிட்டது
குடிசை வீட்டை.....
-
வாங்குவதும் குற்றம்!
வழங்குவதும் குற்றம்!!
எனக்கு மட்டும் விதிவிலக்கு!!
"லஞ்சம்".-
வஞ்ச புகழ்ச்சியும் தோற்று விடும் ,
லஞ்ச(த்தின்) புகழ்ச்சியில் !-
'லஞ்சம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு' என்று எழுதப்பட்ட பலகைகள்
மாற்றியெழுதப்பட்டன
'அன்பு காட்டுவதும் தவறு, எதிர்பார்ப்பதும் தவறு' என்று-
லஞ்சம்..
மரியாதையுடன் பிச்சை எடுக்கும் முறையே லஞ்சம்..
கோவில் வாசலில் தன் வயிற்று பசி தீர்க்க கையேந்தினால் அவன் பிச்சைக்காரன்..
சகல வசதிகளும் சர்வ அதிகாரமும் கொண்ட ஒருவன் கையேந்தினால் அவன் அதிகாரி..
என்று பெயர் சூட்டி அழகு பார்க்கும் சமூகம்..
இவர்களை வேறு பெயர்கள் கொண்டு அழைத்தாலும் செய்யும் தொழில் ஒன்றே
கையேந்துவது..-
உன்னை நேரில் பார்க்கும்போது
லஞ்சம் கேட்டால் என்ன செய்வே நீ?!?
கன்னத்தில் என்றால் சரி.
உதட்டில் கேட்டால் .....?!?!?
ம்ம்ம்.
ஒருவேளை கேட்டால் ....?!?!??!?!
தரமாட்டேனே!
போ.
வேணாம் நீ தர வேணாம்.
நான் வேறாறிடமாவது
வாங்கிக்கொள்கிறேன்.
© நிலானி ®-
வாய்ப்புகள் நிறைய விக்கல் எடுத்தபடியே இருக்கின்றன
லஞ்சத்தின் தண்ணீர் வழங்க என்னால் இயலாதபடி..-
பட்டதாரிகளின் வாழ்க்கை
பட்டம் விடுவதிலும்
பூங்காவின் புல்வெளியிலும்
கடற்கரை மணலிலும்
தேநீர் விடுதி வாசலிலும்
காலம் கடத்துவதாக
நினைப்பவர்களின் பார்வைக்கு
வேலையில்லா திண்டாட்டத்தில்
அவர்கள் உழல்வது தெரிய வாய்ப்பில்லை-