ஶ்ரீ சௌந்தர்   (ஶ்ரீ சௌந்தர்)
95 Followers · 95 Following

நான் நானாகவே இருக்கிறேன்
பிறர் பார்வைகளில் தான்
வேறு வேறாகத் தெரிகிறேன்.
Joined 24 August 2023


நான் நானாகவே இருக்கிறேன்
பிறர் பார்வைகளில் தான்
வேறு வேறாகத் தெரிகிறேன்.
Joined 24 August 2023

வெட்டி முடிக்கும் வரை
அவனுக்கும் ஆக்சிஜன் தந்தது
அந்த மரம்!

-



எவ்வளவு பருகினாலும்
தணிவதில்லை இந்தத் தாகம்
இதழ் முத்தம்!!

-



கனவுகள் இல்லாத வாழ்க்கை
தேங்கி நிற்கும் நீர் போல
பாசி படிந்து பாழாகும்!!

-



பூத்துவிட்டாள் மகள்
தாயால் முகர முடியவில்லை
வறுமையில் குடும்பம்!!

-



நூறு முறை கொடுத்தாலும்
டிஜிட்டல் முத்தங்களில்
ஈரமும் இல்லை,
லிப்ஸ்டிக் கறையும் இல்லை!!

-



புதிதாக கட்டிய வீட்டில்
தூக்கம் வரவில்லை
விடிந்தால் தவணை நாள்!

-



காற்றடிக்கும் திசையில்‌‌
தலை சாயும் ஒரு புல்லைப் போல,
நீ நடக்கும் பாதச்சுவட்டில் பயணிக்கிறேன்
நானும் உந்தன் காதல் திசையிலே..

-



யாருமற்ற நாட்களில்
அமைதியின் சப்தம்
காதைக் கிழிக்கும்,
மார்கழிப் பனி
வெந்நீராய்ச் சுடும்,
பன்னீர் ரோஜாக்கள்
மணம் வீசுவதில்லை..

இதயம் மட்டும்
வெறுமையில் துடிக்கும்..

-



கவலைகள் கழுத்தை நெரிக்கும்
இரவுகளில் எல்லாம்
உருமாறிக் கொள்ளும் ஒரு சக்தியை
வரமாக‌ எனக்கு அந்தக் கடவுள்
தந்திருக்கிறார் போல!!

ஏனென்றால்,
தூக்கம் தொலைத்த ஆந்தையாக
இரவு முழுவதும்
கட்டிலில் உருளுகிறேனே!!

-



கருங்கல்லாக இறுகிய மனதும்
இனிப்பான கற்கண்டாகச் சிதறிவிடும்
அவள் ஒற்றைச் சிரிப்பினிலே!

-


Fetching ஶ்ரீ சௌந்தர் Quotes