ஐந்தறிவுள்ள புலி...
பசித்தாலும்
புல்லைத் தின்னாது!
ஆறறிவுள்ள மனிதன் தான்
பசிக்காமலே
கண்டதையும் தின்கிறான்!
#பரிணாம அவலம்-
கழுகின் கண்களுக்கு மீன்களும்
புலியின் கண்களுக்கு மான்களும்
என்றுமே அழகுதான்!-
தூசியென விழியில்
விழுந்தாய்
கரங்கள் விழியில்
துடைத்து
கொண்ட பின்னே
அறிந்தேன்
விழுந்தது உன்னில்
அதிலும்
புழுதி பரப்பிய
பு(ய)லி(யி)ல் என்று.. !-
தூண்டிலில் கோர்க்கப்பட்ட
புழுக்கள் மீனுக்கும்...
வேட்டையாடி புசிக்க வரும்
வேடன் மானுக்கும்...
அழகாய் தெரிவதும் ஏனோ?...!
-
ஏனோ தன் செய்யும்
ஒவ்வொரு செயலிலும்
தனித்தன்மை கொண்டது
இவ்விரண்டோ சேர்த்து
சிங்கத்தின் செயலையும்
நான் ரசித்துப் பார்பேன்
நாளை இதனைப் பற்றி
கவிதை ஒன்றே போடுவோம்-
உலக அழகியே
என் மனதை கவர்ந்த
செல்லகிளியே
அதிகமாக சிரிக்காமல்
அளவாய் சிரிக்கும்
என் அம்முவே
வீட்டில் எலியாக
வெளியில் புலியாக
இருக்கும் என எழிலரசியே
உன் வெட்கம் ஒன்று
போதுமடி உலகை ஆட்கொள்ள
ஆக அழகின் மறுஉருவமே
நட்பின் நம்பிக்கையே
என் இனிய தேவதையே
நீ மட்டும் போதும் என் உயிருக்கு
அறங்காவலராக
Vishnu❤️priya
-
தேவைகளோடு ஆசையாய் பார்க்கும்போது
அழகு கூடித்தான் போகிறது
பார்க்கும் கண்ணோட்டம் அப்படி போலும்..-
பசி வேட்கை கொண்ட
ஒர் வேங்கை ஒரு நாள்
போனது தன் வேட்டைக்கு
தனியாய் நடந்த அது
அறியாமல் தாண்டி போனது
ஊரின் எல்லை!
வந்தான் ஒரு வேட்டைக்காரன்
புதிய வேட்கை கொண்டு
கொன்றான் அவன் புலியை
கொண்டாடியது அவனை
அவ்வூர் மக்கள்
புகழும் பரிசும் குவிந்தன
வேட்கை கொண்டு வந்த வேங்கை
உயிரை விட்ட நேரத்தில்
உயிரை கொன்ற மனிதனை
தெய்வமாக நினைப்பதேன்?
வேட்டை திறமையா? சாபமா?
புலிகளின் வீட்டை அழித்துவிட்டு
புலிகளையும் அனேகமாய் அழித்துவிட்டு
உலகில் தனியாய் வாழ்வதே பல
மனித வேட்கை இன்று என்று ஆனதே!-
வேட்டையின் போது ஓடும் மானுக்கு இருப்பது உயிரை காப்பாற்றும் "இறை நம்பிக்கை"
துரத்தும் புலிக்கு இருப்பது பசியை போக்கும்"இரை நம்பிக்கை"-
வழியில் கண்ட
மிச்சத்தை
இழுத்து போகும்
ஓநாய் கூட்டம் ..
வேட்டையாடி
வென்று தின்ற !
புலியின்
வலிமையை
அறிவதில்லை..
-