ஒரு நாள் இரவை
கடப்பதற்குள்
ஓராயிரம் நினைவு தூரிகைகள்
உடன்படா கண்ணீர் சாமரங்கள்,
ஒப்பேத்திகொள்ள
இடையிடையே
கண்வழியே
கரைந்துபோகும்
உப்பு தோரணைகள்,
இருந்தும் இடறாமல்
ஒருநிலையில்
உதிர்கிறது
நீ மறுத்த (மனம் சிறுத்த)
என் சொப்பன காதல்-
காட்டை பிரிந்து
காமம் விலக்கி
காலில் சங்கிலியிடப்பட்டு
மண்டியிடப் பழக்கிய யானை
ஆசீர்வதிக்கும் என்று எப்படி நம்புகிறீர்கள்-
எல்லோருக்குமே
பேசி கொள்ள
தான் மனிதர்கள்
தேவை...
பேசியே கொல்ல
அல்ல...-
யாரிடமும் பகிரப்படாத போது ஒரு சோகம் என்னவாகிறது?
அநாதை குழந்தைக்கு பெயர் வைக்க அப்பா பெயர் கேட்பது போன்றது தான்-
எந்தச் சூழ்நிலையிலும்
கைவிட முடியாத போது
உழைப்பு
ஒரு நோய்
குணமாதல் ஒரு
தொடுவானம் !-
ஒவ்வொரு வலியும் துாதுவர்களே.
ஆனால்
ஒவ்வொரு தூதுவனும் கொண்டுவரும் செய்திகளை படிக்க நாம் தவறிவிடுகின்றோம்...!
-
முந்திப் பணிசெல்ல
சுவர்க் கடிகாரத்தில் பத்துநிமிடம் கூட்டிவைத்து
நானே என்னை
ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.
உங்களையெல்லாம் சொல்லி
என்னாகப் போகிறது-
என்ன பேசிவிடப்போகிறோம்
பெரிதாக
நலமா என்று கேட்பீர்கள்
நலம் என்று நான்
பொய் கூறுவேன்
அதை நம்புவதாக
நீங்கள் நடிப்பீர்கள்
பதிலுக்கு நலமா என்று
நான் கேட்ட நலமே என்று கேட்க
நான் சொன்ன பொய்யே கூறுவீர்கள்
முகம் காண ஒரு தேர்வு
நகம் காண ஒரு தேர்வு
மௌனம் விவரிக்க ஒரு போர்
தாமதம் விவரிக்க ஒரு போர்
எண்களை சேமிக்க ஒரு நாடகம்
எண்களை முடக்க ஒரு நாடகம்
யாரோவாகவே இருங்கள்
யாரோவாகவாவது பேசிக்கொண்டிருப்போம்.
-