உன்னை !!
தானே சுமந்து
செல்லும் அந்த
தானியங்கி
உணர்த்தாத
ஒன்றை ..
நீயோ இன்று
உணர்த்தினாய்..
Lift டை
வருடும்
முதன்மை
பாதங்களே ..
வருகை
பதிவேட்டில்
நிறையுமென்ற
வறுமையை..
-
காலங்கள்
கனியுமென்று
காத்திருக்கும்
காய்கள்
அறிவதில்லை..
நீளும்
நாட்களுக்குள் !
தானும்
ஒரு வித
கதையுள்ள
விதைதான்
என்று..
-
நீ வருவதை
அறிந்தும்
சிறிது நேரம்
காத்திருந்து
Lift டில்
Lift தராதவரா..
நீ வளர்வதை
புகழும் அந்த !
Gift டாக
போகிறார்..-
துணிச்சல்
என்பது !
அவ்வப்போது
மிளிரும்
மின்னலே தவிர..
எப்போதும்
ஒளிரும்
கனல் அல்ல.
-
அன்பின் மிகுதி
எப்போதும்
துன்பத்திற்கு
உறுதி ..
ஆகவே !
எவரையும்
நம்பி நின்று
வெம்பி விடாதே..
பறந்து சென்று
மகிழும் அந்த
தும்பியாய் இரு..-
உன் !
sharing கையும்
Status சையும்
கண்டும் காணாமல்
நகரும் பதர்களை
எண்ணி வருந்தாதே..
அத்தகைய
போலி நபர்களையும்
உன் contact டில்
நண்பர்களாய்
பதிந்ததால்
உன்னை நீயே
விரும்பு..-
வலிமை தா
என எழுதும்
கவிஞனின்
வரிகளுக்கு
பின்னே
வலிகள் மிகு
பக்கங்கள்
இருக்கத்தான்
செய்கிறது..
நேசித்து
வாசிப்பார்
யாருமின்றி..
-
ஓரிடத்தில்
இருந்து
கொண்டு
வேறொரு
இடத்தை
விரும்பும்
மனம் யாவும் !
சதா ரணமாகும்
மன உளைச்சலின்
உட்ச பட்ச
உதாரணமே..
-
உலகம்
கற்பிப்பதை
உன் உள்ளம்
உள் வாங்குமெனில்
நீயும் !
இவ்வுலகின்
உன்னதமான
உவமையே..-
சொர்க்கம் ..
நரகம் ..
என்பதெல்லாம் !
வாழ்க்கை
முடிந்த
வழக்கல்ல ..
வருவதை
புன்னகைத்து
கடப்பதும்..
வருத்தி
கொண்டு !
புண் பட்டு
துடிப்பதுமே..-