அன்பின் சிறையில் ஆயுள் கைதியாக்கி
மாயமானாய் நீ
மறவா நெஞ்சில் யாசித்தே காத்திருக்கிறது
உன்னை சுமக்க கருவறை
ஒன்று கரையாத நினைவுகளுடன்.....-
உனக்கான பிரத்யேக
கவிதைகள்
ஒளிந்து கொண்டாலும்
ஒளிர்ந்தே இருக்கிறது
இதயத்தில்
உன்னால்....-
அனைத்தையும்
மாற்றும் மாயம்
உன் மனம் பெயர்த்த
மந்திர புன்னகையே
என்
தந்திரனே .......-
ஆழ்ந்த உறக்கத்தில்
திடீரென விழித்தெழ
செய்யும் கனவின் நியாபகம் நீ.....-
நான் எது நோக்கி
சென்றாலும் வந்தடையும் வழி
நீயாகவே இருக்கிறாய்......!-
நீ எளிதாய் என்னை கடந்து
சென்று விட்டாய்
தான்
பெயர் சூட்டப்படாத
புயலான்று பிரளயமாக
என்னில் பிறக்க
அதை கடக்க
வைக்கும் வேண்டுதல்கள்
தான் உன்னிடம் வழி
கேட்டு கிடக்கிறது
இப்போது.........-
நீ என்னை அணைக்க
முற்படும் போதெல்லாம்
விழிமுடி ஒளிந்து கொள்கிறேன்
உன் பிரிவை நேசிக்கும்
வழியை யாசித்தே.....
~கோவம்-
கண்ணீருக்கு வண்ணமிருந்தால்
அதை சுவாசிக்கும் காற்றுக்கும்
பற்பல வண்ணங்கள்
கிடைத்திருக்கும்
பல கதைகள்
சொல்லாமலே விளங்கி
விழிக்க வைத்திருக்கும்....!-
கடலில்
தொலைத்த
ஒன்று
மீண்டும்
சேராதது போல்
உனக்கு
பிடிக்காத
ஒன்றுக்கள்
எல்லாம்
என்னிடமிருந்து
விலகி போகிறது....-