புண்பட்ட போதிலே உன்
புலன முகப்பு
புகைப்படத்திலே..
புலப்படாத ஓர்
அதிசயத்தை
காண்கிறேன்..!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
உன் வாய்மொழி
இல்லா இரவுதனில..
என் செவி சேரா
உன் மென்குரல்..
என் புலனம் வழி
காணும் உன் உருவமே
என் மொழிகள் யாவும்
உன் விழி கண்டு ஒப்பிக்கையில்
அசட்டுத்தனமாயினும்
ஆறுதலானவையடா..!
-
அறைகளின்
அரையடி தூரத்தில்
அக்கா தம்பி,
புலனத்தில்
பரிமாறிக்கொண்டு
இருந்தன
பாசங்களை...
-
என் புலனமும் ..
புதுக்கவிதை ..
பேசியது ..
இவளின் மொழிகள் ..
புரிந்துகொண்ட ..
புது ஆனந்தத்தில் ...-
அகத்தின் கண்ணாடி
ஆதங்கத்தின் நீட்சி
இயலாமையின் சாரல்
ஈர்ப்புக்கான தளம்
உணர்ச்சியின் வடிகால்
ஊமையின் கனவுபிம்பம்
எண்ணத்தின் வெளிப்பாடு
ஏக்கத்தின் வடிகால்
ஐயத்தின் விவரிப்பு
ஒட்பத்தின் ஒத்திகை
ஓர்மையை நிலைநிறுத்தல்
ஔவியம் பேசும் தடம்
அஃது நம் கருத்துப்பேழை
அதுவே புலனத்தின் பின்னூட்டு (Whatsapp status)-
அப்போதே
இந்த நேரம் பார்த்தேனே
இன்னுமா
கடக்கவில்லை யென்று
அடிக்கடிக்
குழம்பி தான் போகிறேன்...
புலனத்தில் உன்
கடைப் பார்வை நேரமே
என் கடிகார முள்
சுழற்சியாய்
எண்ணிக் கொள்வதால் !!!
-
உனக்கு தானே
இத்தனை அன்பை
சேர்த்து வைத்து
கொடுத்தேன்....
வாங்கி கொண்ட
நீ திரும்பி தராமலே
சென்றதேனோ...
என நித்தமும்
உயிரினை தொலைத்து..
புலனத்திடம் உன்
பழைய குறுஞ்செய்திகளை
கண்டு புலம்புகிறேன்
பித்தியாக.-
ஆயிரம் செய்தி
வந்தடைத்தாலும் புலனமதை...
அன்பே....!!!
உன் செய்தி மட்டுமே
வந்தடைகிறது இதயப்புலனதை...
-
நான் இயங்கலையில் இருக்கும் போது
நீ முடக்கலைக்கு சென்றுவிடுகிறாய்.
சிலசமயம் இயங்கலையில் இருந்தும்
நலமா என்னும் குறுஞ்செய்தியை
கூட அனுப்ப உன் மனம் கர்வம்
கொள்வதேனோ...
என்னிடம் கர்வம் கொண்டு
புலனத்திடம் காதலை
தொலைத்து விடுகிறாய்.
-