இசை கச்சேரி நடத்திகொண்டிருந்தாள்
பாவையவள்!-
Anu Bharathi
(பாரதி)
31 Followers · 24 Following
Joined 15 February 2019
10 MAR 2021 AT 20:38
இலக்கில்லா பாதை நீ;
வினாயில்லா விடை நீ;
விதையில்லா விருட்சம் நீ;
காந்தமில்லா ஈர்ப்பு நீ,
என் காதலே !
-
5 MAR 2021 AT 23:52
பறவைகள் சத்தம் வாழ்த்தாய் மாற
காடு என்னும் வீட்டிற்குள்ளே
நிலவின் சாட்சி கொண்டு,
காற்றின் உரசல் கோஷத்துடன்
சத்தமில்லா ஒரு காதல் !-
18 FEB 2021 AT 21:25
வலுக்கட்டாயமாக துரத்திய பிறகும்,
சுயமரியாதை விடுத்து,
அவ்விடமே செல்லும் ஜீவன்,
மகள்..!!!-
10 OCT 2020 AT 20:54
கல்வி என்னும் மந்திர பானம் புகட்டி,
கனவு என்னும் இறக்கை முளைக்கவைத்து,
மணவாழ்க்கை என்னும்
கூண்டில் அடைத்து சொல்கிறார்கள்,
பறக்கக்கூடாதாம்;
பறக்க நினைப்பவனுக்கு
உறுதுணையாக இருக்கவேண்டுமாம்.-