இந்தக்
காதல்
சாலையில்
நான்
முக்குப்
பிள்ளையார்-
அதுவரை வெறும்
களிமண் தான்..
அச்சில் விழுந்ததும்
சாமியாகி விடுகிறது.
சேரிடம் பொறுத்தே சிறப்பு.-
அந்த...
படிக்கட்டு பிள்ளையாரும்,
எண்ணியிருப்பாரோ..
என்னை போன்றே!
வயதான மூதாட்டி....
கைகளை குறுக்கே உயர்த்தி,
தலையில்....
கொட்டிக்கொண்டது
எதற்காகவென்று...!
-இராதாஇராகவன்.-
என்றும் போல் இன்றும்
மண்ணை கெடுக்கும்
ரசாயன வண்ணம் பூசா
மண் பிள்ளையார்
நம் மண்ணை காக்கும்
பிள்ளையார்-
ஒண்டிகட்டையாய் இருப்பதில் ஓர் முன்னோடி;
ஒருதலை காதலை,
ஒருதடவை கூட எண்ணிடாத பங்காளி;
உன்னால் கடலை போட முடியாதபோது,
உன் பெயர் சொல்லி நாங்கள் பொரியும்
கடலையும் கண்டோம்;
அரசமரத்தில் துயில் கொண்டு
கன்னிகளை கவரும் கண்ணியவானே;
உன் அருள் பெற்றதாலோ,நானும்
தனிமரத்திலே தவழ்ந்து திரிகிறேன்;
இப்படி உன்னை வருணித்து
வருத்தெடுப்பதால்,
ஆசியில் வஞ்சகம் செய்துவிடாதே;
யானை முகத்தோனே,
காக்கும் கணபதியே...-
அன்பின் வடிவமே
ஆனந்த ஜோதியே
ஆணை முகத்தோனே
எம் ஆணவம் அழித்தோனே
அன்னை பார்வதியின்
அருந்தவ புதல்வா
அன்னையும் தந்தையும்
முதல் தெய்வம்
அவர்களே அகிலம் என்று
அனைவருக்கும் உணர்த்தியவனே
ஆடல் தலைவனின்
அருமை புதல்வனே
அறம் பொருள் இன்பம்
அனைத்தும் தருவாய்
சோகங்கள் நீக்கி
சுகம்தனை தருவாய்!!-
குழந்தைப் பாடல்
பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா எங்க போரீங்க?
என் தம்பி முருகனத் தான் பாக்க போரேன்பா.
உங்க தம்பி முருகன் ஐயா எங்க இருக்காங்க?
வீட்டில் சண்டை போட்டுவிட்டு மலை மேலே இருக்கான்பா.
உயரமான மலையில் நீங்க எப்படி போவீங்க?
சின்னதா இந்த மூஞ்சூர் இருக்கு ஏறி போவேன்பா.
ஐயோ மூஞ்சூர் பாவம்.
-