Vinay mac   (வினய்✍️)
59 Followers · 96 Following

read more
Joined 16 June 2020


read more
Joined 16 June 2020
15 NOV 2021 AT 18:49

வார்த்தையிலே
வசீகரம் செய்யும் மாயக்காரியே;
மந்திரச்சொல் ஒன்று சொல்லடி;
மாங்கல்ய துதி பாட!!!!!!

-


5 NOV 2021 AT 16:02

வரிகளிலே வசிக்க வைத்த
வர்ணமங்கையே;

உன் அருகாமையில்
வறுமையின்றி
வந்த வசனங்கள்;

நீ தடம் மாறியதால்
தடுமாறி போனதடி....

-


13 AUG 2021 AT 2:33

தாரகைக்கு
தாஜ்மஹால் கட்டி

தானமிட ஆசை

தன்னார்வக்காதலை
தாமதிக்காமல் தந்தால்...

-


28 JUL 2021 AT 16:50

அவளின் நாடகம் தெரியாமல்
காதலித்ததால் தான் கவியில்
கரைந்து கொண்டிருக்கிறேன்😂

-


19 JUL 2021 AT 21:00

உன்னிடம் பேச
ஓரமாய்
ஒத்திகை பார்த்தே
ஒராயிரம் நாட்கள்
ஓடோடி போனதடி...

-


19 JUL 2021 AT 9:26

மௌனராகம் பாடும் இருதலை காதலில் பிழையென்பது
பேசி ஒருதலையாய் மாற்றுவதென்பதா...
இல்லை ராகம் நீளட்டும் என மௌனம் சாதிப்பதா...

-


19 JUL 2021 AT 9:15

உன் விழியும்;
என் செவி உணர
உன் மொழியும்;
உன்னை காக்கும்
காவலனாய் நானும்;
நில்லாமலே போகும்
காலமும் காதலும்.

-


30 MAY 2021 AT 0:19

நிகழ்காலத்தில் நிழலாய்
போன காதலை;
இறந்தகாலம்
சென்று உயிருட்ட;
கால இயந்திரம்
தேவை இங்ஙனம்❣️

-


18 APR 2021 AT 17:31

உன் விழியில்
விழுந்தேனடி...
விடைகொடு...
உன் இமை திறந்து❣️

-


26 MAR 2021 AT 19:47

இக்காதலால்
கவிதையில்
உதயமாகி
காவியில்
மறைந்து போகிறேன்.

-


Fetching Vinay mac Quotes