அன்றாடம் கூலி வேலை செய்துகஷ்டப்பட்டு படிக்க வைத்த
பெற்றவர்கள்...
வேலை கிடைத்ததும்
மொதல்ல நல்ல துணிமணி வாங்கித்தரனும்.
எந்த வசதியும் இல்லை அவங்களுக்கு
டிவி ஃபிரிட்ஜ் வாங்கனும்..
வாலிபங்கள் ஓடும்..
வயசாகுது துணி துவைக்கும் மெஷின் வாங்கித் தரலாம்..
இன்னும் கொஞ்சம் வசதியான வீட்டுக்கு போகலாம்..
வாலிபங்கள் ஓடும்..
போகவர போட ஒரு நகை இல்லை.
மெல்லிசா செயின்
அம்மாக்கும் எனக்கும் வாங்கிரலாம்.
வாலிபங்கள் ஓடும்...
ஆபீஸ் போகவர அம்மாஅப்பாவ
ஆஸ்பத்திரி அதுஇதுனு கூட்டிப் போக
ஒரு வண்டி வாங்கலாம்...
வாலிபங்கள் ஓடும்..
கல்யாணம் ஆகி போயிட்டா
அவங்களுக்கு செலவுக்கு
வேணுமே.FD ல போட்டா மாதாமாதம்
வட்டி வரும்.
வாலிபங்கள் ஓடும்..
-
நீயும் நானும் சந்திக்காத
நாட்களுக்குச்சாட்சி
நாட்குறிப்பில் வெற்றுப் பக்கங்கள்.-
வீட்டிற்குள் நுழைந்தவுடன்
விழியின் தேடலில்
வாய் அழைக்கும்
அம்மா .....எங்க இருக்கீங்க?-
நேரத்திற்கு தகுந்தாற்போல்
மாறிக் கொள்கின்றன
தேவைகளும் வேண்டுதலும்.-
Tv பார்த்து வருடக்கணக்கில் ஆயிற்று.
இப்ப ஒரு வாரமா பாக்குறேன்.
Cooku with comali
Vj siddhu vlogs
பாக்குறாங்க வீட்டில் மற்றவர்கள்... சிரிச்சுகிட்டே ரசிக்கிறாங்க..
எனக்கு சுத்தமா சிரிப்பு வரல.இதுல சிரிக்கிற அளவு என்ன இருக்குனு எரிச்சல் தான் வருது.
எனக்கு மட்டும் தானா🤔-
அந்தந்த நேரத்தில்
அது அது
கிடைத்தால் தான் மதிப்பு.
*****
அழுகையோ கோபமோ
வெளிப்படுத்தி விடுங்கள்
அந்தந்த நேரத்தில்.
****
-
கைப்புண்ணுக்கு கண்ணாடி
எப்படி தேவை இல்லையோ
அதுபோல் yq ல் எழுதுபவர்களுக்கு மீரா..
தம்பூராவை ஏந்திய அந்த கண்ணனின் மீரா பக்த மீரா.
இவர் கவி மீரா.
காலை வணக்கத்துடன் தொடங்கும் இவர் அருவியாக எழுதியது உண்டு.. இப்போது நேரமின்மை யோ... வெயில்கால குற்றாலம் போல
கொஞ்சம் வறட்சி...இவரது படைப்புகள் குறைந்து விட்டது...
கரம் நீட்டி பலரது ஆர்வங்களுக்கு கவிதைத் தீனி போட உதவுதல் சிறப்பு 💐..
வேறென்ன?? வரிகளில் நுழைந்து வாசித்து ரசியுங்கள். 🙏-
நமக்கு என்று ஒவ்வொரு விசயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கிறது.
அது நம்மைச் சுற்றி இருக்கும்
நாலு பேரோடு(😅?) ஒத்துப் போகலாம்..
ஆனால் நம் கூடவே தவிர்க்க முடியாதவர்களோடு அது முரண்படுமாயின்
அவர்கள் கருத்து நம் மேல் திணிக்கப்படுவதை தடுக்க முடியாத நிலை மிகவும்
மன உளைச்சல் தரக்கூடும்.
👇👇👇
-