என் லூசு பையன்
என் நாய் பையன்..
கீழே👇👇👇-
இன்றளவும்
நீ இடும் எச்சில்
பண்டத்துக்குதான்
வாலை ஆட்டி
காலைச் சுற்றி
என உன் பின்னால்
அலைகிறேன்..
இரத்தல்தான்
இழுக்குதான்
ஆனாலும் அதை
விரும்பியே
செய்கிறேன்...
எச்சமென துச்சமென
இன்று பிச்சை
போடும் நீ
அன்று அந்த முதல்
ரொட்டித் துண்டை
எனக்கு இடாமலே
சென்றிருக்கலாம் !!
-
எப்போதும்
உன்னைக்
கொஞ்சிக்
கொண்டிருத்தலால்
நீ ஆகபெரும்
பாக்கியசாலியென
எண்ணி வைக்காதே
நீ கம்பம்
நான் நாய்...!-
அன்பிற்கான பாடத்தை
நாய்களிடம் கற்றுக்கொள்...!
துரோகத்திற்க்கான பாடத்தை
மனிதர்களிடம் கற்றுக்கொள்...!-
பசிக்கு
குப்பைத்தொட்டியில்
இரைதேடும்
நாயைப்போல
மனக்குப்பையை
கிளறி
கிளறி
கவிதைக்கு
பசியாற்றுகிறேன்...-
மெதுவாய் செல்லுங்கள்....
வாகனங்களே!!!!❤️
ரோட்டில் ரத்தம் இன்னும்
காயவில்லை ❤️❤️
நாய் அடிப்பட்டாலும் எடுத்து
ஓரமாய் போடுவார்கள் ❤️❤️
ஆனால்...❤️
நீ அடிப்பட்டால்!!!?❤️-
கையும் களவுமாக பிடிபட்டான்
எங்கள் வீட்டுத் திருட்டுப் பையன்
முற்றத்தில் கல் பிறக்கி
கறுக்முறுக் கென்று
அதை ருசித்து
முற்றத்தை குழியாக்கி
தன் வயிற்றை மண்ணாக்கி
மறைத்து வைத்த
நாய் பையன்...
இஞ்சி மரப்பா நான் திங்கையிலே
என் முகத்தை பார்த்தபடி
இஞ்சி திண்ண குரங்காட்டம்
என் மேல் ஏறி அமர்ந்தபடி
அம்மாஞ்சி போல் எனை பார்க்கும்
இஞ்சி மரப்பா அடிமை அவன்..
செல்ல செல்ல சேட்டைகள்
அவ்வப்போது அவன் நிகழ்த்த
கைகட்டி வாய்பூட்டி
சங்கிலியில் நான் பூட்ட
குரை குரைக்கும் அவன்
முகத்தை பார்த்தபடி
நான் அமர
கரம் கொண்டு எனை அழைத்து
அவிழ்த்து விட வேண்டிக்
கேட்கும் அவன் அழகுக்கிங்கு
ஏதும் ஈடு இல்லை
ரசித்தபடி என்றும் நான்
என் செல்ல நாய் ஆயிற்றே😂😂💜-