உறவாடத்தான் விருப்பம்..
எதிர்பாரா சில எதிர்பார்ப்பால்..
எனை
எடுத்தெறிந்த சில உறவுகளால்..
இன்று
தனிமையின் நிழலை சற்றே
எதிர்பார்த்தபடி நான்...-
பிணைக்கப்பட்ட பிணைக்கைதிகள்
பிணக் கைதிகளாய் மாறி
அலறும் சப்தம்...
கண்ணிற்குப் புலப்படா
அம்மர்ம குரல் நோக்கி
என் விழிகள் இடம்பெயற...
கூர்செவி இரண்டும்
கூற்றுக்களை நோட்டமிட்டது...
"பிணக்கைதியாய் நீயும் வா"என்றது..
உடல்தனை அற்ற ஓர் அமானுஷ்ய குரல்...
வாடை காற்றோடு.. பிண வாடையும்
எனை சுற்றி எழவே...கண்களில் ஈரம்...
ஆழ்மனத்தின் சமிஞையோ
"என்னிறுதி இரவு இதுவாகவும் இருக்குமோ!" என்றுணர்த்தியது..-
கீழே 👇👇👇
விதி செய்த விளையாட்டோ
வினைப்பயனின் அறுவடையோ..
மண்ணை தாயாகவே
மனம் முழுதும்
எண்ணி எண்ணி...
மண் மணக்க
தினம் உழைத்த
விவசாயி மனிதனுக்கு
அருமருந்தும்
பெரும் விருந்தும்
படையலிட்டே வழக்கம்...
சிறு மண்ணோ
பெரும் காடோ
பயிர் முதல் பனை வரை
அனைத்தும்
விளைய வைத்தே பழக்கம்...
இன்றோ
விளைச்சல் கையில் இன்றி
அலைச்சல் அதிகம் எழ
எழுவதற்கு வழியின்றி..
துணையெனவும்
தரணி இன்றி..
தனிமையில் துயர் களைய...
தன்னையே
களையென்றெண்ணி..
ஆணிவேரோடு கொய்தானோ
அவனது விழுதுகள் தாங்கிய
அவ்வாலமரத்தை...
இருக்கும் போது தெரியவில்லை
இன்றிவன் இருக்கும் இடமும்
தெரியவில்லை..
இருந்தும்..
இருக்கும் வரை
விதைத்தவன் எல்லாம்
விதையாகி என்றும் வளர்வானே தவிர
வீழ்வான் இல்லையே...
-புவி😻puvi
-
நான் மறந்த பல
நிகழ்வுகள் அடக்கம்....
ஆனால்
என்னால்
மறக்கப்பட வேண்டிய
நினைவில்
மறைந்திருக்கும்..
சில மறைக்கப்பட்ட
அந்நிகழ்வுளுக்கோ..
என்னுயிரின்
மூச்சுக்காற்றும் அடக்கம்...-
the past events
But I couldn't do it
Because they are searching me
and
running towards on me-
எல்லாம் விட்டொழித்தல்
என்பது...
ஓயாத அலைகளை சற்றே
ஓய்வெடுத்துச் செல்ல
சொல்வதற்கு சமம்...
இன்றோ நாளையோ
என்றியங்கும்
வாழ்வின் ஓட்டத்தில்..
என் மூச்சிக் காற்றும்
இப்புவியில் நூறாண்டுகள்
சுற்றித் திரிய வேண்டும் என்பதோ..
நாளையே அடங்கி விட வேண்டும் என்பதோ..
எதிர்பார்ப்பேயன்றி வேறென்ன?-
தீபாவளி கொண்டாட்டத்திற்கு
என்றைக்கும் இல்லாதது போல்
இவ்வருடம் ஏனோ
சொந்த ஊர்
சென்று வர
வேண்டுமென
சிராஜின் மனம்
ஏங்கியது.எதைப்
பற்றிய நினைப்பும்
இன்றி மறுகணமே வெளி நாட்டில்
இருந்து சொந்த ஊரான குளத்தூருக்குச் சென்றான்,தனது மனைவி மற்றும்
இரு குழந்தைகளுடன்...அங்கு....
கீழே👇👇👇👇-