திடீரென
வந்து
தொற்றிக்
கொள்ளும்
தேசப்
பற்றைப்
போலத்தான்
எப்போதாவது
உனது புன்னகை
என் உயிர்ப்பை
சுட்டிக்காட்டுகிறது-
பிற தேசத்தை; பிற நாட்டவரை –
எதிரியாக எண்ணுவதல்ல தேசப் பற்று!
தன் தேசத்திலே பல வேற்றுமை -
இருந்தாலும், தர்ம சக்கரம் போன்று,
பிரிவினை தாண்டி; வேற்றுமையில் ஒற்றுமை
காணும் மனிதனுள் உண்டு தேசப்பற்று!
குங்கும குருதி யோடும் மேனியை
அமைதி காக்கும் வெண்மை மனது!
என்றும் இளமை மாறா பசுமை –
தேசம் என்பாரதம் என்றெண்ணும் போது
உடற் ரோமம் உயர்த்தும் சிரத்தை!
என் பெருமையே எனது நாடு!-
பெருவாரியான இந்தியர்களின் தேசப்பற்று
இந்திய அணி, மட்டைப்பந்தில் வெற்றி அடைவதில் காட்டப்படுகிறது.-
புல்வாமா தாக்குதல் :🇮🇳🇮🇳🇮🇳
தாய் நாட்டிற்காக தன் இன்னுயிர் ஈன்ற வீரர்களுக்கு வீர வணக்கததுடன் இதோ என் குடும்பத்தாரின் மௌன அஞ்சலி. 🙏🙏🙏-
கவி பாடி , போராடி !!!
சாதிகள் தேவையா என்று
குரல் கொடுத்து, பெண் உரிமைக்கும்
அன்றே போராடி !!!
ஆயிரம் பேர் மட்டும் வாருங்கள்
யுத்தம் செய்து மண்ணை மீட்போம்
என முழக்கம் செய்த
சுபாஷ் சந்திரபோஸ் , பாரதி , பெரியார்
போன்ற தலைவர்களை சிந்தித்து
வணங்கி !!!
இனிய சுதந்திர தின
திருநாள் வாழ்த்துகள்
-
இமையம் என்னுமிடத்தில் சிறுசிறு தூறலாக விழுந்த
பாரதம் என்னும் நதியாய் பிறந்து
தெய்வீகமான அன்பை தேடி சாதி மதம் என கிளை நதியாக பிரிந்து ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் அமைதியியும் அன்பையும் துணை நதியாக கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் என் தேசத்தை வன்முறை எனும் அணை போட்டு தடுத்தாலும் நீர் மெல்ல மெல்ல கசிகின்றதே அகிம்சை முறையில் கசிந்த நீர் எல்லாம் அன்பு என்னும் சமுத்திரத்தில் கலக்குமே தவிர வன்முறை என்னும் சாகடலில் அல்ல-
காவி – பலம்,தைரியம்.
வெண்மை – உண்மை, அமைதி.
பச்சை – வளர்ச்சி, பசுமை.
அசோக சக்கரம் - தர்மம்.
-
ஒரு நாடு ஒரு தேசம் வேண்டாமே
இந்தியா என்ற ஜனநாயகம் வேணுமே!
ஒரு தாய் மொழி ஹிந்தி தேசிய மொழி என்பது வேண்டாமே!
அனைத்து தாய் மொழியும் தேசிய மொழியாக வேண்டுமே !
மாட்டின் பேரில் கலவரங்கள் வேண்டாமே !
மனிதமும் மனித நேயமும் வேண்டுமே!
மதம் என்ற பெயரில் மதங்கொள்ள வேண்டாமே
மனிதாபிமானம் கொண்டு வாழ்வோமே!
பல இன அருங்காட்சியகம் வேண்டுமே
அதுவே பல் இன மனிதர்கள் வாழ உகந்ததே !
வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா
இதை வேறுபடுத்த நினைக்க வேண்டாமே!
-
🖤தேசிய கீதத்தை இயற்றியவர் (தாகூர்)
🖤தேசிய கீதம் பாட எடுத்துக்கொள்ளும் கால அளவு (55 வினாடிகள்)
🖤தேசிய கீதம் முதன்முதலில் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாட்டில் (1911 டிசம்பர் 27 )ல் பாடப்பட்டது
🖤தேசிய கீதம் எழுதப்பட்ட மொழி (வங்காளம்)
🖤தேசிய கீதம் துவக்கத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது (பாரத விதாதா)
🖤தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ரவீந்த்ரநாத் தாகூர் (morning song of India)
-