At the end of the day,
The consolation I seek-
Is only through music!
Giving away a break,
For a moment, from reality-
Into the world of tranquility!-
தமிழுள்ளங்களுக்கு:- #ஸ்ரீ_கிறுக்கல்
திருக்குறள்:- #தி... read more
நிறையுடைமை என்னும் நிலையில் இருந்து வீழாமல் இருக்கவேண்டுமானால், பொறுமை குணத்தை பின்பற்றுதல் வேண்டும்!
-
தன்னை அறியாமலே,
வெளிப்படும் உள்ளடக்கிய-
வெளிக் காணாமலே,
திரையிட்ட சுயரூபம்!-
மனம் சோர்ந்து போகும் போது
துயர் சூழ்ந்து, வழி மாய்ந்து,
சுடர் தோய்ந்து அணையும் போது-
வினை யாவும் சுமை ஆகும்,
நிலை வாய்த்து குலையும் போது
விழியோர நீர் துளிகள் வெளிவர,
ஏதும் தயங்காது வழி அமைத்திடு-
இடைவெளி இல்லா ஓட்டத்தினின் ஓய்வெடு!-
வறுமையுள் வறுமை விருந்தினரை உபசரிக்க இயலாமை. வலிமையுள் வலிமை மூடர்களின் செயலைப் பொறுத்துக்கொள்ளுதல்!
-
பலநூறு ஆண்டுகளாகத் தேக்கப்பட்ட
பிற்போக்கு மூடர்களின் எண்ணக்
கழிவுகள் இன்றும் சாக்கடையாக பலருள் தேங்கிதான்க் கிடக்கிறது!-
சாலைப் பயணத்தின் தூரம் நீளவில்லை,
விழியோரக் காட்சி நின்னின் நீங்கவில்லை,
வேளை மாற்றம் அறியும் நிலையில்லை,
கடிகாரம் உணர்த்தும் நேரம் போதவில்லை!
ஓயா துரைத்தும் வார்த்தை தீரவில்லை,
இமைமூடக் கண்டும் கண்கள் ஓயவில்லை,
மாளா தெண்ணமும் ஏக்கம் மாற்றவில்லை,
நரைக்கூட நேரும், ஆசை மாயப்போவதில்லை!-
மனதின் வெற்றிடத்தை நிரப்பி,
இருளின் கருமையை விலக்கி,
கனவின் அழகை உணர்த்தி-
புத்துயிர் புகுத்தவ(ன்)(ள்) நீ!-
தீமை விழைக்க நினைப்பவர்களை என்றும் பொறுத்தருள்தல் நன்று, அதினும் அத்தீமையை மறத்தல் சிறப்பு.
-