பழத்தினும் சுவையாய்
தேனிலும் இனிமையாய்
என் நாவில் தவழ்கின்றாயே!
என்றென்றும் இளமையாய்
அறிவின் இலக்கணமாய்
அழியா வாழ்வு பெற்றாயே!
தாய்மொழியே ஆயினும்
மொழியினும் மேலாய்
என் உயிருடன் கலந்த தாயே!
-
உலகின் ஒவ்வொரு
மூலையிலும்
ஓரிரு நபர்களாவது
தமிழில் பேசிக்கொண்டோ
எழுதிக்கொண்டோ
தமிழை
வாசித்துக்கொண்டோதான்
இருக்கிறார்கள்.
அவர்கள்
தமிழர்களாகவும்
இருக்கலாம்
தமிழ் தெரிந்த
அந்நாட்டவர்களாகவும்
இருக்கலாம்.-
உலகிலேயே மொழியை தாய்க்கு இணையாக மதிக்கும் முதல் மொழி தமிழ் மொழி.....
மொழிபற்று சற்றே குறைந்தாலும்...
ஏதோ ஒர் மூலையில் தமிழக வீரன் வீரமரணம் அடைந்தான் என்ற செய்தி....
கண்களை கண்ணீரால் நிறையச் செய்கிறது......
தமிழ் மொழியை போதிக்க வேண்டும் வருங்கால சந்ததியினருக்கு......
முதல் பாடமாக தமிழ் மொழியை பயில வேண்டும்......
தமிழ் வாழ்க வளர்க என்று கோஷங்களையும்,மேடை பேச்சுகளில் மட்டும் பயன்படுத்தாமல்......
செயலில் நடைமுறை படுத்த வேண்டும்.....
நம்மில் இருந்து மாற்றத்தை கொண்டு வந்தால் குடும்பம் பிறகு, ஊர் ,வட்டாரம் என்று பரந்து விரியும்....
தாய் மொழியை வளர்க்க அனைவரும் முற்ப்படுவோம்....-
இரவு மூடப்பட்ட,
அந்த செம்மொழி பூங்காவின்,
இருக்கைகளிலெல்லாம்...
இன்னும்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்,
நேற்றைய...
காதலர்களெல்லாம்!
விடியலும் காத்திருக்கிறது,
பேசி முடிக்கட்டுமென்று.!
-இராதாஇராகவன்.
-
கடையேழு கண்டங்களில் பிறந்த குழந்தையின் முதல் வார்த்தை அம்மா அது என் தாய் மொழியான தமிழ் மொழி என்பதில் மிகவும் பெருமை கொள்ள வேண்டும்,
அகராதியை இன்றைய தினத்தில் தாமே உருவாக்கம் செய்யும் காலத்தில் எம் மொழி பல நூற்றாண்டுகளுக்கு முன் தனி அகராதியை பெற்று விளங்கிற்று
எம் தாய் மொழியாம் தமிழ் மொழி என்றுமே செம்மொழி தான் அது கற்காலம் முதல் இக்காலம் வரை .......-
செம்மொழி இது எம்மொழி
சிதையா தொரு தொன்மொழி
முன்தோன்றிய நன்மொழி
கிடையா தொரு தண்மொழி
முன்னோா் பாடிய முதுமொழி
இன்றுவரையில் இது இன்மொழி
பரவிக் கிடக்கும் பழம்மொழி
படிக்கப் படிக்க இளம்மொழி
நற்றாா்க் கெல்லாம் காா்மொழி
மற்றாா்க் கெல்லாம் வோ்மொழி
கற்றவா்க் கெல்லாம் கண்மொழி
உற்றவா்க் கெல்லாம் பண்மொழி
சிறப்பு குன்றா சீா்மொழி
பிறப்பு முதலே ஓா்மொழி
முச்சங்கம் வளா்த்திட்ட எம்மொழி
எக்காலமும் அழியா தமிழ்மொழி..,-
உணர்வினூடே உரையாடி மௌனத்தை செம்மொழியாக்க சிரத்தை கொள்ள வைக்கிறாயடி ரதியே அன்பின் இராட்சசியே...
-
"தமிழ்"
அதனுடன் கூடிய அனைத்தையும் அழகாக்கும்.
எல்லாமும் எப்போதும் அழகுறும்.
"கற்றது தமிழ்".-