நீ அணிந்திருக்கும்
காட்டன் புடவையின்
மெல்லிய நறுமணம்!
மல்லிகை வாசத்தோடு
நீ நெருங்கும் கணம்...
என் தீபாவளி ஆரம்பம்..!!
நான் கொண்டாடுகிறேன்
மணம் நிறைந்த தருணத்தை!!-
குடை மறந்த நாளில்...
நான் முழுதாய்
நனைந்துவிட்டேன்
உனதன்பில்!
அருகில் நீ
நம் உதட்டில் ஈரம்!
நம் இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது..!!!-
"என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா"
இந்த வசனம் பெரும்பாலும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும்
மேலும் படிக்க கீழே!!👇👇-
அறிவின் வெளிச்சமா?
அல்ல அழுத்தத்தின் நிழலா?
அதுதான் இன்றைய பாடம்..!-
புதிதாக வாங்கிய
பேனாவாக இருக்கட்டும்;
புதிதாக வாங்கிய புத்தகத்தின்
முதல் பக்கமாக இருக்கட்டும்;
என் பெயரை மட்டும்
எழுத நினைத்தேன்..!
பிறகு கவிதையாக
இருக்க வேண்டுமென்று
என் பெயருக்கு பின்னால்
உன் பெயரையும்
சேர்த்து எழுதுகிறேன்..!!
இப்படி போகுமிடம்,
பார்க்கும் பொருட்கள் எல்லாம்
உன்னையே நினைக்க வைக்கிறது!
என்ன மாயம் செய்தாயடி நீ..!!-
உணர்வின் வெப்பத்தால்
அவள் முகத்தில் பரு;
மனதில் கோபம்,
“உன்னால்தான்!”
என்று சாடினாள்.
நான் சொன்னேன்,
“சரி, அதை நானே
தீர்க்கிறேன் என்று!
அவள் கேட்டாள்,
“என்ன மருந்து?”
“என் உதட்டின்
குளிர்ச்சி தான்"❣️-
நெருங்காமல்
நெஞ்சங்கள்
இணைந்திடும்
இருவருக்குமான
இடைப்பட்ட தூரம்!
அதுதான் அதுவேதான்
நம் காதல் அழுத்தம்..!!-
கொஞ்சம் இளைப்பாற பூங்காவில் அமர்ந்து
வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறேன்!
பேசாமல் பேசும் காதலர்களின் பார்வையில் பூக்கும் கதைகள்;
சுற்றி நிற்கும் மரங்கள் கூட, அவர்களை ஆசீர்வதிக்கின்றன!
வாழ்ந்து கொண்டிருக்கிறது காதல்!
வாழ வைக்கிறது கவிதை.!!-
அவளுக்கு ஒன்னுனா
ஏன் இப்படி துடித்துப் போகிறாய் என்று
என் இதயத்திடம் கேட்டதற்கு...
என்ன செய்வது?
கண்ணியமாக காதல் செய்ய
கற்றுக்கொடுத்தவள்
அவள் மட்டும் தானே!!
என்று பதிலளிக்கிறது..!-
Me: அன்பே! காலையில் என்னை முத்தமிட்டு எழுப்பி
ஒரு கப் காஃபி கொடுத்தால் போதும்!
அந்த நாளின் தொடக்கத்தை
உன் வாசம் கொண்டு வரவேற்க...!!
She: உன் இஷ்ட மயிருக்கெல்லாம்
என்னால பண்ண முடியாது...
உனக்கு வேணும்னா நீயே போட்டு குடி டா வெண்ண..!!!-