@ Rajbharath   (வி.இராஜ்பாரத்)
279 Followers · 243 Following

read more
Joined 7 April 2019


read more
Joined 7 April 2019
14 MAR AT 20:28

எல்லாமே அலாதியான வயதிலே,
விளையாட்டாய் சாமியான கல், பூ மஞ்சள்
மற்றும் குங்குமக் கூடுகை.

-


2 SEP 2023 AT 19:23

திறக்காத கதவின் தாழ்வாரத்தில்
சலிக்காமல் அமர்ந்து கனவு
காண்கிறேன்.

தானாய் உடையும் கதவையும்
கடந்து ஒற்றை புன்னகை தரிசனமும்
பெற்று மீண்டும் தவறாது
வாடிக்கையாய் நாளும் வந்து
போகிறேன்.

அந்த ஒற்றை புன்னகைக்கு தான்
நீளும் இத்தனை மெனக்கெடல்கள்...

-


2 SEP 2023 AT 19:14

எதற்குமே தயாரில்லை,
எல்லாம் எடுத்தவுடனே நடக்கனும்.
அப்படி தான் நடக்குது.
ஆனால் என்ன எல்லாம்
எனக்கெதிராக அதிவிமரிசையாக
கொண்டாட்டமாக...

-


2 SEP 2023 AT 19:09

பொழியாத கந்தரமாய் எங்கும்
கணக்கிறாய்.

எந்த வழியும் இல்லை தான்.

இருந்தும் எப்படியும் துளி அன்பேனும்
ததுபிடக்கூடும் எனும் உள்ளுணர்வு
தான் பாடாய் படுத்துது.

ஒவ்வொரு நொடியும் புதுப்புது
கடிதம் எழுதி மனமே மனதை
படுத்திகொள்ளுது...

-


2 SEP 2023 AT 18:45

அலையடித்துக்
கொண்டிருக்கும் வண்ணங்களை
வளைத்து வட்டமிடவைத்து
கரைசேர்த்தனுப்புகிறது இந்த
குமிழ்கள்...

-


10 JUN 2023 AT 8:42

கருணைக் கொலைக்கு
கடவுள் எதற்கு.

-


10 JUN 2023 AT 8:34

அழமுடியாத அத்துணை
பேருக்கும், சேர்த்து அழுகிறது
இம் மேகம்.

-


5 JUN 2023 AT 14:32

இனி எந்த வழியுமே இல்லை.
பேரிருளுக்குள் வெளிச்சம்
தேடி அலைந்து திரிய
வேண்டியது தான். எந்த
வெளிச்சத்திற்கும் வாய்ப்பே
இல்லை தான்.

ஆனாலும் வெளிச்சம் தேடி
அலையும் இந்த தேடலை
வழிமறிக்கும் திடம் என்னில்
இல்லையே. என்னை இனி
என்ன செய்ய...?

-


5 JUN 2023 AT 14:26

எல்லா கவலைகளையும்
பிரச்சினையையும் நாம தான்
விலை கொடுத்து வாங்கி வச்சிட்டு,
மகிழ்வை ஓரவஞ்சனையோடு
அனுபவிக்கிறோம்.

-


5 JUN 2023 AT 14:23

நாடகமேடையில் எது உண்மை எது பொய். அது எதுவானாலும் சரி அது "நாடகம்" அவ்வளவு தானே.

-


Fetching @ Rajbharath Quotes