Kathiravan Kathir   (கதிரவன்)
1.1k Followers · 61 Following

read more
Joined 20 October 2017


read more
Joined 20 October 2017
18 MAY 2024 AT 13:57

அன்பிற்கினியவள் வரவு நோக்கி நுடங்கா இமைகள்
வரவு அறிந்து உணர்ந்த இருவிழிகள் துயில் கொள்ளா யென்றும் ...

-


28 MAR 2024 AT 8:15

காதலின் சுவடுகள் நினைவுகளில் மலர
காதலி நனைவதால் மகிழ்ந்த நெஞ்சம்
காலத்தின் மாயையால் படிப்படியாக குறைந்து வளர்ந்து கரை கடந்து கவின் கதையாக பவனி வருகிறது...!!

-


21 MAR 2024 AT 19:33

கண்ணொடு கண் நோக்கி நேசம் கலந்து ஒன்றாக
குரல் வழித்தோன்றும் சொற்களும் பயனில்லாது போகும்

-


21 MAR 2024 AT 11:50

விழிகள் களவு போனது அவள் கடைக்கண் பார்வையறிந்து
இதயம் புரிவு உணர்ந்து உயிர் பெற
மெய்யும் மலர்ந்து இன்புற்று
பசை மிகுந்து புணர்ச்சி கூடி உயிர்மெய் புகற்சி கொண்டது

-


31 DEC 2023 AT 21:25

காதலியின் சுவடுகள் நினைவுகளில் மலர
நெஞ்சம் காதல் உவகையில் நனைந்து இதமாக துதிப்பாடியது

-


8 OCT 2023 AT 20:06

நினைவுகள் ஒளிந்து நிரம்ப
காகிதம் துடித்தது
கவிதைகள் கிறுக்கல்கள் ஆனது
நொடிகள் தவித்தது
காதலின் தனிமை கண்டு

-


4 OCT 2023 AT 23:06

முகவரி தேடி அலையும் அன்பு எட்டும் தொலைவில் நினைவுகளாக உலாவி வர
காத்திருக்கும் கனங்கள் யாவும் காதலுக்கு உரியது!!!

-


2 OCT 2023 AT 22:10

காகிதமும் வியந்து எதிர்பார்த்து காத்திருந்தது
எழுதுகோலும் கனத்து எழுத்துகள் மயங்கி
அன்பெனும் சாயல் மாயமாக முகவரி தேடி அலைகிறது

-


22 SEP 2023 AT 22:04

நீங்கினால் வெப்பக்காற்றாக கோபம் கொள்வதும்
அணுகினால் பனிக்காற்றாக குளிர்ந்து மகிழ்வதும்
மங்கையின் அன்பெனும் தீயின் வெளிபாடே

-


2 SEP 2023 AT 22:36

நேசம் உயிர் கொள்ள இதயத் துடிப்பாய் வந்தவள்
இரவை கவர்ந்து நித்திரை கலைத்து
நினைவலைகளில் மலரோவியமாக தவழ
கார்குழல் மேகமும் கரைந்து நிழலாக
எழில் துள்ள ஒளிர்கின்றாள் இதய புகழ் வாய்த்தவள்

-


Fetching Kathiravan Kathir Quotes