புரண்டு புரண்டு படுத்தாலும்
நிறுத்தவில்லை அவன் புலம்பலை..
காற்றையும் உள்ளங்கையில் சிறைபிடித்தேன்..
அவன் கதறலை மட்டும் கட்டுப்படுத்திட
இயலவில்லை..
பொறுமை இழந்து ஒளி இழந்த இருட்டில்..
ஒலித்த திசை பிடித்து ஓங்கி அறைந்தேன்..
இதோ அவன் இறப்பின் திலகம் இரத்தமாக என் கைகளில்..!!
அவன் "கொசு"-
சூப்பர் ஸ்டார் நண்பனே,
கடிப்பது தான் கடிகிறாய்
அது என்ன காதில் வந்து
சொல்லிவிட்டு போகிறாய்...
உன்னால் தங்களை தாங்களே
அடித்து கொள்பவர் அதிகம்...
நோயாளிகளின் வில்லன்...
மருத்துவரிடம் சம்பளம்
வாங்கா ஊழியன்...-
அதீத காதல்
என்னையே சுற்றிசுற்றி வருகிறாய்
காதோரம் வந்து கானா பாடல் பாடுகிறாய்
எத்தனை முறைதான் விரட்டுவது
மீண்டும் மீண்டும் என்
மேனியையே தேடுகிறாய்
என் மீது தான் அவ்வளவு காதலா ?
இல்லை உன் பசிதீர என்னைத்
தேடும் உன் சுயநல செயலா ?
இரவில் உறக்கம் தொலைந்து போனது
உன் மேல் வெறுப்பும் உயர்ந்து போனது ...
கொசு தொல்லை தாங்க முடியல 😁-
மூடாமல்
திறந்து வைக்கும்
நன்னீரில் வாழ்ந்தே
மனிதர்களை
முடக்கிடுவேன்
டெங்குவைப் பரப்பும்
ஈடிஸ் நான் !!
-
என்மேல் அவளுக்குஇருக்கும் சிநேகம் கொசுகடித்ததடம் போன்றது..
திடீரென்று உதித்து, திடீரென்று மாயமாகும்...-
கழிவுநீரும் சாக்கடையும்
எம் இருகண்கள்!
நோய் பரப்புவதே
எம் குலத்தொழில்!!
மனித குருதியே
எம் உணவு!!!
"கொசுக்கள்".-
காதருகே வந்த அந்த ரீங்காரம்..
தள்ளிவிட்டேன்
இரவுத் தூக்கத்தை கெடுத்ததால்.
அதற்கு
சுற்றி வந்து இத்தனை பேரா
என்னை கடிப்பீர்கள் ?
கொசு.-